தம்பலகாமம் பிரதேச மெய்வல்லுனர் போட்டி

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் 34 ஆவது மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான போட்டி நேற்று (07.10.2023) முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி, உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,இளைஞர் சேவை மன்ற உதவிப் பணிப்பாளர்,இளைஞர் சேவை அதிகாரி என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றியீட்டியவர்களுக்கான கேடயங்களும் பரிசில்களும் பிரதம அதிதியால் வழங்கி வைக்கப்பட்டன.