தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வானது இன்று (23) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
சரஸ்வதி, மகாலட்சுமி, துர்கை போன்ற முப்பெரும் தேவியரை போற்றும் வழிபாடு நிகழ்வாக வாணி விழாவானது கொண்டாடப்படுகிறது.விசேட பூஜை வழிபாடுகளும் இதன் போது இடம் பெற்றதுடன் பூஜை வழிபாட்டினை தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலின் பிரதம குரு மோகனகாந் சர்மா செய்தார்.