தம்பலகாமத்யில் பாடசாலைகளுக்கு கதிரைகள் வழங்கி வைப்பு

தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட அறநெறி பாடசாலைகளுக்கான கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வானது பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நேற்று (30)பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

தேசிய உறவுகள் நலன்புரி சங்கத்தால் 8 அறநெறி பாடசாலைகளுக்கு 250 கதிரைகள் இதன் போது ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி வழங்கி வைக்கப்பட்டன. இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், இந்து கலாசார உத்தியோகத்தர் மற்றும் நலன்புரி அமைப்பின் ஊழியர்கள் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.