தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்-இந்து மதகுருமார் 

781 Views
நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அனைத்து தமிழ் மக்களும் தங்கள் வாக்குகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென இந்துக் குருமார் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அன்பார்ந்த தமிழ் மக்களே எம் அனைவருக்கும் வாக்குரிமை என்பது எமது வாழ்வுரிமையாகும். இதனை நாம் எமது சமுதாயக் கடமையாக எண்ணி செயற்பட வேண்டும்.

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் எமது உரிமையை செம்மையாகப் பயன்படுத்த வேண்டும். எமது சமுதாயத்தினதும் உரிமை கருதி செல்லுபடியாகக் கூடிய வண்ணம் எமது வாழ்வுரிமையை தவறாது கண்டிப்பாக பயன்படுத்தி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமச்சாரிய சுவாமிகள் கருத்துத் தெரிவிக்கும் போது, தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் ஜனநாயகக் கடமையாகும். அந்தக் கடமையையும் பொறுப்பையும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

தங்களின் ஜனநாயக கடமையான வாக்களித்தலை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொருவரும் தங்களின் வாக்குரிமையினை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், வாக்களிக்கும் உரிமையை அனைவரும் எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும் காலம் தாழ்த்தாது நேரத்துடன் அனைவரும் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்குகளை பயனுள்ளதாக அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply