தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக பொங்கல் பானை அறிவிப்பு

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக, பொங்கல் பானை சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரான சி.வி.விக்னேஸ்வரன், தனது பொங்கல் வாழ்த்துடன் அறிவித்துள்ளார்.

உலகில் வாழும் உறவுகளுக்கு தனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த அவர், பொங்கல் பானை, தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் என்பதனையும் அறிவித்துள்ளார்.

அந்த வகையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சி போட்டியிடத் தீர்மானித்துள்ளது இந்த அறிவிப்பின் ஊடாக உறுதியாகியுள்ளது.