தமிழ் மக்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தவரை பிரித்தானியா விடுவித்தது

576 Views

ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய பிரித்தானியா தமிழ் மக்களுக்கு எதிராக கொலை அச்சுறுத்தலை உடல்மொழி மூலம் வெளிப்படுத்திய சிறீலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரியங்கா பெர்ணான்டோவை பிரித்தானியா உயர் நீதிமன்றம் இன்று (19) விடுதலை செய்துள்ளது.

இவருக்கு எதிராக தமிழர் தரப்பு தொடுத்த வழக்கில் பெர்ணான்டோவுக்கு எதிராக முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகம் அற்கு எதிராக மேற்முறையீடு செய்திருந்தது.

இராஜதந்திரிகளுக்கான பாதுகாப்பு பொறிமுறையின் அடிப்படையில் அவரை விடுவிப்பதாக பிரித்தானியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது மிகப்பெரும் ஏமாற்றத்தை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply