தமிழ் பொதுவேட்பாளரை வலியுறுத்தும் சிவில் அமைப்புகளை சந்தித்த ஜூலி

Screenshot 20240516 062243 தமிழ் பொதுவேட்பாளரை வலியுறுத்தும் சிவில் அமைப்புகளை சந்தித்த ஜூலிதமிழ் பொது வேட்பாளர் விடயத்தை வலியுறுத்தும் சிவில் அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளை நேற்று யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் பரவலடைந்து – வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நிகழ்ந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கான வழிகளை ஆராய்வதற்காக சிவில் சமூகம், இளைஞர்கள், உள்;ர் அரச அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் பலதரப்பட்ட கண்ணோட்டங்களை கேட்பதற்காக இந்தவாரம் நான் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளேன் என்று ஜூலி சங் கூறியிருப்பதும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.