தமிழ் பெண்மணியின் இடத்துக்கு தெரிவான சிங்களப்பெண்! ஜனாதிபதியின் நடவடிக்கை

355 Views

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் புதிய செயலாளராக பத்ரானி ஜயவர்தன நேற்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளராக இருந்த திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் கடந்த 30ஆம் திகதியிலிருந்து உருவான வெற்றிடத்திற்கு இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திலுள்ள பத்ரானி ஜயவர்தன ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பத்ரானி ஜயவர்தன கடந்த 2008 முதல் 2015 வரை, கொழும்பு மாநகர சபையின் ஆணையாளராக பணியாற்றியுள்ளதோடு, 26 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிர்வாக சேவை பதவிகளை வகித்துள்ளார்.

Leave a Reply