தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சீர்குலைத்தவர் எம்.ஏ.சுமந்திரனே!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் எம்.ஏ.சுமந்திரன் வந்த பின்னரே கட்சிகள் சீர்குலைத்தது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீரசிங்கம் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டார்.

சுமந்திரன் என்பவர் எங்கிருந்தோ வந்து திடீரென்று கூட்டமைப்பிற்குள் நுழைந்தார்.

இதன் பின்னர் சம்பந்தப்பட்ட சேனாதிராஜா தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

அவருக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டும் அறிவு உள்ளவராக இருக்க வேண்டும் தலைமைப் பொறுப்பு என்பது சாதாரணமானது அல்ல.

அதை சரியாக வழிநடத்த தெரிந்திருக்க வேண்டியவை. இவை எவையும் தெரியாத ஒருவர் தான் தலைமைப் பதவி வகிக்கின்றார்.

இப்போது சுமந்திரன் கூறுவது ஆரம்ப காலத்தில் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டணியில் ஆகவே செய்யப்பட்டனர்.

ஆனால் அந்த வரலாறு தெரியாதவர்கள் இப்போது மீண்டும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார்கள்.

எனவே இவற்றை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டினார்.