தமிழீழம்- லத்தீன் அமெரிக்கா வரலாற்று பொதுத் தன்மைகள் – சுருதி

“லத்தீன் அமெரிக்கா – நெருப்பிலும் இரத்தத்திலும் பிறந்த வரலாறு” என்றநிமிர் பதிப்பத்தாரால் 2019இல் வெளியிடப்பட்ட தமிழ் மொழியாக்க நூலை அடிப்படையாகக் கொண்டு இவ்வாக்கம் தமிழீழ வரலாற்றிற்கும் லத்தீன் அமெரிக்க வரலாற்றிற்கும் உள்ள ஒற்றுமைகள் விபரிக்கிறது.

இரண்டிற்கும் இடையிலுள்ள ஒற்றுமைகள் வாசகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும்.தமிழீழமும் லத்தீன் அமெரிக்காவும் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய காலனியாதிக்கத்திற்கு முகம்கொடுத்தன.

இன்றும் வேறு வடிவங்களில் காலனியாதிக்கத்திற்கு முகம் கொடுத்து வருகின்றன.தமிழீழத்திற்கு முதலில் வந்த ஐரோப்பிய காலனியாளர்கள் போத்துக்கேயர்கள். லத்தீன் அமெரிக்காவுக்கும் இஸ்பானியர்களும் போத்துக்கேயர்களும் சமகாலத்தில் வந்தார்கள்.viber image 2019 11 24 13 50 07 தமிழீழம்- லத்தீன் அமெரிக்கா வரலாற்று பொதுத் தன்மைகள் - சுருதி

போத்துக்கேயர்கள் தமிழீழம் உட்பட தெற்காசியாவில் ஆழமாக கால்பதித்திருந்ததால் லத்தீன்அமெரிக்காவின் மிகப்பரந்த நாடான பிரேசிலில் மட்டுமே தமது ஆதிக்கத்தை நாட்டினார்கள். மிகுதி லத்தீன் அமெரிக்கா இஸ்பானியர்களின் கைகளில் அகப்பட்டது. போத்துக்கேய காலனிய ஆதிக்கத்துடன் தமிழீழத்திற்கும் லத்தீன் அமெரிக்காவுக்குமான ஒற்றுமைகள் ஆரம்பிக்கின்றன.

மேலே குறிப்பிட்ட லத்தீன் அமெரிக்கவரலாற்று நூலில் சொல்லியிருப்பது போல, போத்துக்கேயர்கள்(இஸ்பானியர்களும்) தமது சமயத்தை பரப்புவது தமது கடமை என்றவெறியுடன் வந்தார்கள். இதனால் லத்தீன் அமெரிக்காவிலும்தமிழீழத்திலும் இருந்த வழிபாட்டு தலங்களை அழித்து அதே இடததில்தங்கள் சமய வழிபாட்டு தலங்களை கட்டி சமயத்தை பரப்பினார்கள்.

ஆபிரிக்க மக்களை அடிமைகளாக வாங்கி விற்கும் வியாபாரத்தையும்
போத்துக்கேயர்களே ஆரம்பித்து வைத்தார்கள். லத்தீன் அமெரிக்கா
உட்பட அமெரிக்கா எங்கும் அடிமை வியாபாரம் வளர்ந்தது.
பிற்காலத்தில் ஏனைய காலனிய ஆதிக்க நாடுகளும் அடிமைவியாபாரத்தை செய்தன. அமெரிக்கா எங்கும் காலனியாளர்களின்
ஏற்றுமதி உற்பத்திகள் வளர்ந்தன. அடிமைகள் இந்த உற்பத்திகளுக்கு
அவசியமான ஒரு வளமாக அமைந்ததார்கள். தமிழீழத்தில் அடிமை
வியாபாரம் இடம்பெறவில்லை.

ஆனால் பிற்கால காலனியாளர்களானஆங்கிலேயர்கள், இலங்கைத்தீவில் அவர்களின் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்கு தமிழ்நாட்டிலிருந்து தமிழர்களை அடிமைகளாக கொண்டு வந்தார்கள். தமிழ் அடிமைகள் உற்பத்தி செய்த தேயிலையே “சிலோன் தேயிலை” என்று பிரபலமான ஏற்றுமதி பொருளானது.getimage தமிழீழம்- லத்தீன் அமெரிக்கா வரலாற்று பொதுத் தன்மைகள் - சுருதி

 

லத்தீன் அமெரிக்காவின் காலனியாதிக்கம் 300 ஆண்டுகள்தொடர்ந்தன. இக்காலத்தில் ஆபிரிக்கர்கள், பூர்வகுடிகள், ஐரோப்பியர்கள் ஆகிய மூன்று இன மக்களும் கலந்த மெஸ்ரிசோ எனப்படும் கலப்பின மக்களும்தோன்றினார்கள். இருந்தாலும் ஐரோப்பியர்களே சமூக படிநிலைகளின்மேல்மட்டத்தில் இருந்தார்கள்.

லத்தீன் அமெரிக்காவின் சுதந்திரபோராட்டங்கள் பல சந்ததிகளாக லத்தீன் அமெரிக்காவில் தங்கிவிட்டஐரோப்பியர்களாலேயே முன்னெடுக்கப்பட்டன. இது போலவே, தமிழீழம் உட்பட, தெற்காசியாவிலும் சுதந்திர போராட்டங்கள்  சமூகத்தின் மேல்மட்டத்தவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டன. லத்தீன்அமெரிக்காவின் பெரும்பான்மை மக்களையும் சுதந்திர போராட்டத்தில் இணைக்க வேண்டிய தேவை இருந்ததால், “அமெரிக்கா அமெரிக்கானோர்களுக்கே” என்ற கோசத்தை ஐரோப்பிய மேல்மட்டத்தவர்கள் சுதந்திர போராட்ட கோசமாக முன்வைத்தார்கள்.

தெற்காசியாவிலும் சுதந்திர போராட்டத்தில் பெரும்பான்மை மக்களை
இணைக்க வேண்டிய தேவைக்காக இது போன்ற கோசங்களை
மேல்மட்டத்தவர் முன்வைத்தார்கள்.1825இல் லத்தீன் அமெரிக்க நாடுகள் எல்லாம் சுதந்திரம்அடைந்துவிட்டன. ஏனெனில் அக்காலத்தில் இஸ்பானிய மற்றும் போத்துகேய வல்லரசுகளின் சக்திகள் மங்கத்தொடங்கிவிட்டன.

இரண்டாம் உலக போரின் பின்னர், பிரித்தானியாவின் சக்திகள்மங்கியபோதே, தெற்காசிய நாடுகளுக்கு சுதந்திரம் கிடைக்க ஆரம்பித்தது.அப்போதும் தமிழீழத்திற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. இலங்கை தீவுக்கு கிடைத்த சுதந்திரமும் முழுமையானதாக இருக்கவில்லை. ஏனெனில்,பிரித்தானிய கடற்படையின் ஒரு பிரதான வளமான திருகோணமலைதுறைமுகத்தை சுதந்திரத்திற்கு பின்னரும், பிரித்தானியா தனதுகட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. காலனியத்தால் அடிமைப்படுத்தப்பட்டவர்களை உயர்த்தும் நோக்கத்துடன், லத்தீன் அமெரிக்காவில் சுதந்திர போராட்டத்தின் போது“அமெரிக்கானோர்களே மண்ணின் மைந்தர்கள்” என்ற கோசம் கையாளப்பட்டது.

தெற்காசியாவிலும் மேல்மட்டத்தவர் இதே போன்ற கோசங்களை இதே காரணத்திற்காக கையாண்டார்கள். இலங்கையின்பெரும்பான்மை இனமான சிங்களவர்களிடம் ஒரு தீவிர சுதந்திர போராட்ட சிந்தனை இருக்கவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

இவர்களைப் போலல்லாமல், ஈழத்தமிழர்களிடம் சுதந்திர போராட்ட
சிந்தனை தீவிரமாக இருந்தது.pandara vanniyan 3 தமிழீழம்- லத்தீன் அமெரிக்கா வரலாற்று பொதுத் தன்மைகள் - சுருதி

லத்தீன் அமெரிக்காவிலும் சரி,தெற்காசியாவிலும் சரி, சுதந்திர போராட்டத்தின் போது உருவாக்கப்பட்ட புதிய தேசிய அடையாளங்கள், சுதந்திரத்தின் பின்னர், அதன் மக்களை ஒன்றிணைக்கும் சக்தியை இழந்துவிட்டது. சமூகத்தின் அடிமட்ட மக்கள் தொடர்ந்தும் விளிம்பு நிலைகளிலேயே இருந்தார்கள்.

இப்போ விளிம்பு நிலை மக்கள் மத்தியில் இவர்களிடையே சிறிது மேல்மட்டத்தில் இருந்தவர்கள் மக்களை ஒன்றிணைக்க தேசியத்தை கையிலெடுத்தார்கள். வெளிநாட்டு இறக்குமதிகளை இவர்கள்
புறம்தள்ளினார்கள். உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி அதனால் பெருமை அடைய முனைந்தார்கள்.

லெனினின் ரசிய புரட்சி இவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் இவர்கள் தேர்தல் அரசியலில் தொடர்ந்தும் தங்கி இருந்தார்கள். இதனால், லத்தீன் அமெரிக்காவிலும் சரி, தெற்காசியாவிலும் சரி, அங்குள்ள பிளவுபட்ட சமூகங்களின் மத்தியில்தேர்தல் அரசியலூடாக சமத்துவத்தை ஏற்படுத்த முடியாமல் போனது.

1960இல் கியூபா புரட்சி வெற்றி பெற்ற பின்னர், சமத்துவமான சமூகத்தைஉருவாக்கும் போராட்டங்கள் ஆயுதப்போராட்டங்களாக மலர்ந்தன.இதுவே தமிழீழத்திலும் இடம்பெற்றது. இக்காலத்திலிருந்து லத்தீன்அமெரிக்காவுக்கும் தமிழீழத்திற்கும் உள்ள ஒற்றுமைகள் அதிகமாகின்றன.

மாக்சிய சிந்தனையும் கியூபா புரட்சியுமே தேசிய ஆயுதப்போராட்டங்களின் அகத்தூண்டுதல்களாக இருந்தன.இப்போராட்டங்களுக்கு ஐ-அமெரிக்க-சோவியத் பனிப்போர் காரணமல்ல. எப்போதும் நடப்பது போலவே லத்தீன் அமெரிக்காவிலும்தமிழீழத்திலும் கிளர்ச்சி-எதிர்ப்பு சக்திகள் நடுத்தர வர்க்கத்திலிருந்தும் இராணுவத்திலிருந்தும் கிளம்பின. இவை, முக்கியமாக கிளர்ச்சி-எதிர்ப்பு இராணுவங்கள், ஐ-அமெரிக்காவுடன் நட்பு பேணின.

லத்தீன் அமெரிக்காவின் இராணுவங்களின் ஐ-அமெரிக்க நட்பு இரண்டாம் உலக போரின் போது ஆரம்பித்தது. தமிழீழத்தில் ஆயுதப்போராட்ட காலத்தில் இதை அவதானிக்க முடிந்தது. லத்தீன் அமெரிக்க வரலாற்று நூலிலிலிருந்து,“லத்தீன் அமெரிக்க இராணுவ தளபதிகளுக்கு ஐ-அமெரிக்க கூட்டு மிகவும் விருப்பமாகவே இருந்தது. இது ஏன் என்பதைஇலகுவாக புரிந்து கொள்ளலாம்.

ஐ-அமெரிக்க கூட்டு,இராணுவத்தின் பலத்தை அவரவர் நாடுகளில் அதிகரித்தது.அத்துடன் தேசிய பாதுகாப்பு என்ற கருத்தும் ஒரு கவர்ச்சியானநோக்கமாக – “சுதந்திர உலகத்தை” அல்லது “மேற்குலக
நாகரீகத்தை” பாதுகாப்பது – இருந்தது.

மேலும், இதனால்இவர்களுக்கு செல்வந்தர்களும் அதிகாரமிக்கவர்களும்
நண்பர்களானார்கள்.”சிறிலங்கா இராணுவத்திற்கும் இது நேர்த்தியாக பொருந்தும். இரண்டு பிராந்தியங்களிலும் உள்ள இராணுவங்கள் கடத்தல்கள், சித்திரவதைகள்,கொலைகள் போன்ற கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளைகையாண்டுள்ளன.

ஆயுதப் புரட்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்போர்கள் தெருக்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் கடத்தப்பட்டுஎவ்வித சட்டரீதியான தடயங்களுமின்றி காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.லத்தீன் அமெரிக்காவில் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நடந்வையே தமிழீழத்தில் பின்னர் நடந்தன. இரண்டு இராணுவங்களுக்கும் ஐ-அமெரிக்க இராணுவமே அறிவுரைகள் வழங்கும் குருவாக இருந்தது.

ஒரு உதாரணமாக ஆர்ஜன்டீனாவை குறிப்பிடலாம். 70களில் அங்கு பலஆயுத புரட்சி குழுக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல்கள்நடந்தன. வரலாற்று நூலிலிருந்து,

“இதற்கு இராணுவத்தின் பதில் நடவடிக்கையாக “கொலைக்குழுக்களின் காணாமல் போகச்செய்வது” இருந்தது.

இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போனவர்களாக்கப்பட்டனர். விசாரணைக்கும் சித்திரவதைக்கும் பின்னர் கொலை செய்யப்பட்ட இவர்களைப்பற்றிய எதுவும்தமக்கு தெரியாது என்பது போல, உடல்கள் இரகசியமாக
எறியப்பட்டன.”தமிழீழ மக்களுக்கு இது மிகவும் பழக்கப்பட்ட விடயம்தான்.

காணாமல் ஆக்கப்பட்டடோரின் எண்ணிக்கையில் உலகத்திலேயே சிறிலங்காமுன்னிலையில் இருக்கிறது. 2002 போர்நிறுத்த ஒப்பந்த காலத்தில்தமிழீழத்தில் நிறுவப்பட்ட மனித உரிமைகள் அமைப்பான நிசோர்அக்காலத்தில் பல அறிக்கைகளை வெளியிட்டது. அதில் ஒன்று 1990ஆகஸ்ட்-செப்டம்பர் காலத்தில் தீவுப்பகுதிகளிலிருந்து காணாமல்ஆக்கப்படவர்களை பற்றியது. நூற்றுக்கணக்கான இளைஞர்களைஇராணுவம் கைது செய்தது. இவர்களில் 70க்கும் அதிகமானோர்காணாமல் ஆக்கப்பட்டனர்.disappeared family 10 தமிழீழம்- லத்தீன் அமெரிக்கா வரலாற்று பொதுத் தன்மைகள் - சுருதி

வேறொரு நிசோர் அறிக்கை 1974-2004வரையான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் புள்ளிவிபரங்களின்தொகுப்பாக உள்ளது. இதிலும் ஏராளமான தமிழர்கள் காணாமல் ஆக்கப்படனர் என்ற விபரம் உள்ளது.

ஆர்ஜன்டீனாவைப் பற்றி வரலாற்று நூலிலிருந்து,

“….1976இல் புதிய இராணுவ சனாதிபதி பதவிக்கு
வந்தார். இப்போது, கிளர்ச்சி-எதிர்ப்பின் கொலைவெறி
தாண்டவமாடியது. இறுதியாக, இராணுவம் கொரில்லாஎதிரிகளை அழித்தொழித்தது. “யூத-கிறிஸ்தவ- நாகரீகத்தின்” வெற்றி என்று தளபதிகள் தங்கள் வெற்றியை புகழ்ந்தார்கள்.”

இருபது ஆண்டுகளுக்கு பின்னர் இதே போன்ற கிளர்ச்சி எதிர்ப்பு
நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவம் ஈழத்தமிழர்கள் மேல் 2009
வரை நடத்தியது. 2002 போர்நிறுத்த ஒப்பந்தத்தை பலவீனமடைய செய்து இன்னும் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்டையில் நிசோர் இவற்றையும் அறிக்கைகளாக பதிவு செய்தது.

இராணுவமும் இராணுவத்துடன் இணைந்திருந்த துணைக்குழுக்களுமே கடத்தல்களை செய்ததாக குடும்பத்தவர்கள் நிசோருக்கு தகவல்கள்கொடுத்தார்கள். 2006 இல் சிறிலங்கா அரசு போக்குவரத்து தடைகள் போட்ட பின்னர், பாதிக்கப்பட்ட மக்களைிடமிருந்து தகவல் திரட்ட நிசோரால் முடியாமல் போய்விட்டது. இக்காலத்திலிருந்து 2009வரையான காலத்தில் காணாமல் ஆக்கப்படுதலும் கொலைகளும்கட்டுக்கடங்காமல் நடந்தன.

நாளிதழ்களில் வந்த அடிப்படையில் 3000பேர்கள் இக்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டதாக நிசோர் பதிவு செய்தது. 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர் இன்னும் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டனர். இவை பற்றிய விபரங்கள் இன்றும் சரியாக பதியப்படவில்லை. இவற்றில் சிலவற்றை இங்கே
பார்க்கலாம்.

லத்தீன் அமெரிக்க வரலாற்று நூலிலிருந்து,

“1970களின் பிற்பகுதியில். “காணாமல் ஆக்கப்பட்டவர்களின்” தாய்மார்கள், பிள்ளைகளின் படங்களை தாங்கிக்கொண்டு, புவனஸ் ஆய்ரஸ் நகரத்தின் மையத்திலிருந்த, பிளாசா டி மாயோவில், போராட ஆரம்பித்தார்கள். இரணுவம் அவர்களை பைத்தியம் என்று விபரித்தது. கொடூரமான உண்மைகளை
அறிந்துகொள்ள விரும்பாதோர், முகத்தை மறுபக்கம்திருப்பினார்கள். பிளாசா டி மாயாவின் அன்னையர் என்று அறியப்பட்ட இத்தாய்மார்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தங்கள் பிள்ளைகளின் பெயர்கள் தைத்த தலை குட்டையை சீருடை
போல அணிந்து கொண்டார்கள்.

நடுத்தர வயதான பள்ளி ஆசிரியர்களும், சமூக சேவையாளர்களும், கடை விற்பனையாளர்களும் – ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஏக்கத்தில் போராட்டத்தை தொடர்ந்தார்கள். தேசத்தின் மனச்சாட்சியாக நின்றார்கள். இராணுவத்தின் இரகசிய
இழிபோரின் சாட்சிகளாக நின்றார்கள்…. கொஞ்சம் கொஞ்சமாக,
இப்பைத்தியக்கார பெண்களின் குற்றச்சாட்டில் உள்ள உண்மையை உலகம் ஏற்று மதிக்க தொடங்கியது.”

இன்றும் தமிழீழத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள்
ஆர்ஜன்டீனா தாய்மார்களை போல இரண்டு வருடங்களுக்கும் மேலாகபோராட்டம் நடத்துகிறார்கள். இவர்களில் பலர் நீண்ட கால போராட்டவலிகளால் இறந்து போய் விட்டார்கள்.

லத்தீன் அமெரிக்காவில் மக்கள் சோசலிச ஆட்சியை தேர்தலில் தெரிவுசெய்து அமர்த்திய போதெல்லாம், ஐ-அமெரிக்கா அவ்வரசுகளையும்அழிப்பதற்கு பல வழிகளை கையாண்டது. சிலி நாட்டின் மேல்மட்டத்தவர் சிஐஏ உதவியுடன் 70களில் இதை அழித்தது பற்றி வரலாற்று நூலிலிருந்து,

“11ம் திகதி செப்டம்பர் மாதம் 1973ம் ஆண்டு, சிலி இராணுவத்தின் ராங்குகள் வீதிகளில் இறங்கின. நாட்டிலிருந்து பாதுகாப்பாகவெளியேற்றி விடுவதாக சொன்னதை மறுத்த சனாதிபதி அயன்டே,அவருடைய இராணுவத்தின் தாக்குதலில் இறந்தார். ஐ-அமெரிக்காவின் பனிப்போர் வீரர்களின் கணிப்பில், சனநாயகத்திற்கு இன்னுமொரு வெற்றி… ஆயிரக்கணக்கான வெகுசன கூட்டணியின் ஆதரவாளர்கள், நாட்டுப்புற பாடகர்களிலிருந்து கிராமப்புற ஆர்வலர்களிலிருந்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வரை, சன்டியாகோவின் கால்பந்து மைதானத்தில் மந்தைகள் போல ஒன்று கூட்டப்பட்டார்கள். பலரை இதன் பிறகு காணவில்லை….”

லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும்பான்மையானவை சுதந்திரமடைந்தபின்னரும், மத்திய அமெரிக்க நாடுகள் அதன் நிலவுடமையாளர்களின்கைகளில் சிக்கியே கிடந்தது. இதற்கும் முக்கிய காரணமாக இருந்தது ஐ- அமெரிக்கா தான்.

தொடர்ந்த பல தசாப்தங்களுக்கு ஐ-அமெரிக்கா மத்திய அமெரிக்கா நாடுகளின் விடயங்களில் தொடர்ந்து தலையிட்டு வந்ததையும் வரலாற்று நூல் விபரிக்கிறது.
ஒரு சர்வதேச உதவியுடன் போர்நிறுத்தம் செய்த பின்னரும், தமிழீழத்தின் நடைமுறை அரசு அழிக்கப்பட்டதும் இது போலத்தான்.

பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப் பகுதியில் ஐ-
அமெரிக்கா தான் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை தடை
செய்ய நிர்ப்பந்தித்தது. இதுவே பேச்சுவர்த்தைகள் தடைபடுவதற்கு
காரணமாக அமைந்தது.

பின்னர் ஒரு பேரழிவுப் போர் நடந்து கொண்டிருக்க ஐநாவும் அதை எதுவித செயலுமற்றுபார்த்துக்கொண்டிருந்தது. இன்றும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.

தமிழீழ வரலாற்றிற்கும் லத்தீன் அமெரிக்க வரலாற்றிற்கும் உள்ள
ஒற்றுமை ஆச்சரியமானதுதான். ஐரோப்பிய காலனிய காலமும் தொடரும் நவகாலனிய காலமும் உலகை இன்றும் ஆட்டி வைக்கிறது என்பதையே இந்த ஒற்றுமை காட்டுகிறது. உலகின் ஏனைய வரலாறுகளை ஆழமாக
படித்தால் அங்கும் இப்படியான ஒற்றுமைகளை காணலாம் என்ற
சந்தேகம் எழுகிறது அல்லவா?

Leave a Reply