ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்தியாவால் இலங்கை அரசமைப்பில் கொண்டு வந்த 13 வது திருத்தச்சட்டம் உரிமை வழங்கும் என்று பரவலாக பேசப்படுகின்றது. ஆனால் அந்த திருத்தச் சட்டம் எந்த அளவிற்கு வீரியமிக்கதாகவும் ஆற்றலமிக்கதாகவும் இருக்கிறதா? என்றும் இந்த திருத்தச் சட்டத்தை செயல்படுத்தவிடாமல் நீர்த்துபோக செய்ய இலங்கையும் உலக நாடுகளும் செயல்படுகின்றதென்றும் ஆய்வாளர் அரூஸ் வழங்கும் அறிவுறுத்தலையும் அவதானிப்பையும் இங்கு கட்டுரையாக தருகிறேன். அவர் வழங்கும் அறிவுரையை கவனத்தில் எடுத்து செயல்படவேண்டும் என்பது நமது கடமையாக இருக்கிறது என்பதை மறந்துவிடவேண்டாம்.
இரணிலின் நரித்தந்திரம்
அடிப்படையில் இரணில் விக்கிரமசிங் குள்ளநரியாகவும் சிங்கள பௌத்த பேரினவாதியாகவும் விளங்குகிறார். இவர் மிகப்பெரிய நடிகராக இருக்கிறார். அரூஸ் இரண்டு காரணங்களை முன்வைக்கிறார். ஒன்று. 13 வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினால் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பேரினவாத ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் அவருக்கு எதிராக திரும்பிவிடுவர் என்ற அச்சமும் எதிர்பார்ப்பும் அவரிடம் இருக்கின்றன. இரண்டு தமிழ் மக்களுக்கு எவ்வித உரிமையும் கொடுக்க கூடாதென உறுதியாக இருக்கிறார். அதனால் இந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டுமென்று நாடகமாடுகிறார்.
நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுத்தால் தேர்தலில் எந்த கட்சியும் அவர்மீது குறைகூற முடியாது. எதிர்கட்சிமீது பழியைப் போட்டுவிடலாம் என்று எண்ணுகிறார். அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காமல் நீர்த்துபோக செய்துவிடலாம் என்று கணிக்கின்றார். தமிழ் மக்களிடம் எதிர்கட்சிகள்தான் ஒப்புதல் தரவில்லை என்று கூறி நல்லபெயர் எடுத்துவிடலாம் என்று நினைக்கிறார்.
அந்த நீர்த்துபோக செய்தலை நியாயப்படுத்த கட்சிகளின் கருத்துகேட்பு நடத்துகிறார். இந்தக் கபடநாடகத்தை தெளிவாக நடத்துகின்றார். இதற்காக இந்தியா போன்ற உலகநாடுகளின் ஆதரவையும் ஒப்புதலையும் நாடுகின்றார். எனவே இரணிலினால் எவ்வித உரிமையும் தமிழ் மக்களுக்கு கிடைக்காது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்கவேண்டும்.
நாடாளுமன்றத்தின் நாடித்துடிப்பின்மை
13 வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்திற்கு கொண்டுசெல்லவேண்டுமென்று பலரும் கூறி வருகின்றனர். ஏற்கனவே ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்ட திருத்தத்தை செயல்படுத்த மீண்டும் நாடாளுமன்றத்திற்கு கொண்டுசெல்ல தேவையில்லை.
அந்த திருத்தத்தில் கொடுக்கப்பட்ட உரிமைகளையோ, அதிகாரத்தையோ அதிகபடுத்தவேண்டுமென்றால் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு கொண்டுசெல்லலாம். நிறைவேற்றப்பட்ட திருத்தத்தை செயல்படுத்த நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை. ஆனால் மீண்டும் நாடாளுமன்றத்தை நாடுதல் இந்த திருத்தத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்கு தேவைப்படுகிறது. நாட்டினுடைய நாடாளுமன்றத்தை பலிகடா ஆக்குவதற்கு முயற்சிசெய்கின்றனர்.
ஒரு திருத்தத்திற்கு இரண்டு ஒப்புதல்கள் தேவையில்லை. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தால் நீர்த்துபோகச் செய்வது நாடாளுமன்றத்தையே நாசமாக்குவதாகும்.
ஆளும் கட்சியின், எதிர்கட்சிகளின் பேரினவாதம்
இவர்கள் பெயருக்குதான் ஆளும்கட்சி என்றும் எதிர்கட்சிகள் என்றும் இருக்கின்றனர். இவர்களிடையே எவர் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கவேண்டும் என்ற போட்டி இருக்கிறது. உண்மை, நேர்மை, நயன், உரிமை போன்றவற்றை மறுப்பவர்கள்தான் இந்த எதிர்கட்சி உறுப்பினர்கள். இவர்கள் பௌத்த பிக்குகளின் ஆணையின்படி நடப்பவர்கள்.
இலங்கை அரசு பௌத்த மதத் தலைவர்களின் கைகூலிகளாகவும் பாதுகாப்பு கவசமாகவும் நீட்சியாகவும் செயல்படுகின்றனர். இவை வகுப்புவாத கூட்டத்தில் உள்ள பிரிவுகளாகும். இவர்கள் தமிழர்களை எதிரிகளாக கருதி, எவ்வித உரிமைகளையும் கொடுக்க கூடாது என்று எண்ணி செயல்படுகின்றனர். நாடாளுமன்றம் செயல்படாமல் முடக்குவது இந்த எதிர்கட்சிகளும் ஆளும் கட்சிகளாகும். இவர்கள் புத்த பிக்குகளின் கையில் உள்ளனர். நாடாளுமன்றம் இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
அதனால் இந்த திருத்தத்தை நிறைவேற்றாமல் நீர்த்துப்போக செய்துவிடுவர். ஏனென்றால் இந்த திருத்தம் இலங்கையை சிங்களமயமாக்குதலுக்கு அல்லது பௌத்தமயமாக்குதலுக்கு எதிராக இருக்கும் என்று கருதுகின்றனர். காணி அதிகாரத்தையும் காவல் அதிகாரத்தையும் கொடுத்துவிட்டு சிங்களமயமாக்குதலை நடத்தமுடியாது. எனவே இதை ஒருபோதும் செய்ய முன்வரமாட்டார்கள்.
இசுலாமியரின் பச்சோந்திதனம்
இந்த திருத்தத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைவதால் இசுலாமியர்கள் சிறுபான்மையினராக மாற்றப்பட்டுவிடுவர். தமிழர்கள் பெரும்பான்மையினராக வருவர். அதனால் தங்களது அதிகாரத்தை செலுத்த முடியாதென அச்சம் அவர்களிடம் தேவையில்லாமல் இருக்கிறது. இசுலாமியர்கள் எப்பொழுதும் பெரும்பான்மை இனக்குழுக்களான சிங்களவர்களோடு கைகோர்த்து செயல்படுவர்.
எப்பொழுதுமே தமிழர்களை பகைவர்களாக கருதி, துன்புறுத்தி கொலைசெய்தவர்கள். தங்களுகென்று ஒரு மாகாணத்தை கைப்பற்றவேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் செயல்படுகின்றனர். சிங்களவர்களுக்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் செயல்படும் இசுலாமியர்கள் இந்த 13 வது திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றனர்.
இந்திய ஒன்றிய அரசின் தமிழின விரோதம்
இந்த 13 வது திருத்தத்தை இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்து, இலங்கை அரசை ஏற்க வைத்தது. அந்த அதிகாரம் இந்திய ஒன்றிய அரசுக்கு இருக்கும்போது அதைச் செயல்படுத்த, இலங்கை அரசை கட்டாயப்படுத்த உரிமையும் அதிகாரமும் இருக்கின்றன.
ஆனால் செய்வதற்கு மனமில்லை. ஏனென்றால் தமிழின விரோதம் இந்திய ஒன்றிய அரசிடம் தலைவிரித்தாடுகிறது. தமிழினக்குழு அழிந்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்கிறது இந்திய ஒன்றிய வகுப்புவாத அரசு. இந்த வகுப்புவாத அரசியலால் வடக்கு கிழக்கு மாகாணங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, மன்னாரை அதானிக்கும், யாழ்ப்பாணம், பலாலி வானூர்தி நிலையம், திரிகோணமலை துறைமுகம், வடக்கில் உள்ள தீவுகள் அனைத்தையும் இந்திய ஒன்றிய அரசு எடுத்துக்கொண்டது.
இந்துத்துவ, வகுப்புவாத அரசியல் அரசு அகண்ட பாரத கனவில் ஆட்சிசெய்வதால் தமிழர்கள் இருக்க கூடாதென நினைக்கிறது. தேசிய தலைவர் பிரபாகரன் “தமிழர்களின் பாதுகாப்பை இந்திய ஒன்றிய அரசிடம் ஒப்படைத்துவிடுவோம்” என்றார். ஆனால் அதற்கு மாறாக இந்திய ஒன்றிய அரசு தமிழர்களின் பாதுகாப்புக்காக எதுவும் செய்யவில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களை இந்திய ஒன்றியத்தின் மாநிலங்களாக மாற்றி, தமிழர்களை அடிமையாக்க நினைக்கிறது.
தமிழ் அரசியல் தலைவர்களின் தன்மானமின்மை
இவர்களிடம் ஒற்றுமை இல்லை. தெளிவான அரசியல் நிலைப்பாடில்லை. எல்லா தமிழ் அரசியல்வாதிகளும் ஒன்றாக இணைந்து, ஒன்றைக் குறிக்கோளை முன்வைக்க தயாராக இல்லை. நமது முடிவை எதிரி முடிவுசெய்யக் கூடாது. இது தன்னாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
திரு கஜேந்திர பொன்னம்மபலம் இந்த 13 வது திருத்தச் சட்டம் பயனற்றது என்று எதிர்த்தார். ஆனால் மற்றவர்கள் செயல்படுத்தவேண்டுமென்று அமைதியாக உள்ளனர். இதனால் மக்களுடைய பிரச்சினைகளையும் எதிர்பார்ப்புகளையும் முடிவையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த, சிங்கள ஆட்சியாளர்களிடம் தெரிவிக்க தயங்குகின்றனர். மறைக்கின்றனர். மறுக்கின்றனர்.
அதனால் தமிழ் அரசியல் தலைவர்களிடம் துணிவும், கருத்துத் தெளிவும், அரசியல் நிலைப்பாடும் தெளிவாக இல்லை அல்லது தெரிந்தும் தெரியாதுபோல நடிக்கின்றனர். ஈழத்தமிழர்களை பிரதிநிதிப்படுத்த தெரியவில்லை. திரு டக்கலஸ் தேவானந்தம் போன்ற தமிழர்களே சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவாகவும் கைகூலிகளாகவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் மக்கள் தலைவர்களாக செயல்படவில்லை. இதனால் இந்த திருத்தச் சட்டம் செயலற்றுபோய்விடும்.
ஈழத்தமிழர்களின் தாகம்
தங்களை தாங்களே ஆட்சிசெய்ய மக்களாட்சியை விரும்புகின்றனர். எவருக்கும் அடிமையாகி வாழ விரும்பவில்லை. சுதந்திராமாக வாழ விரும்புகின்றனர். தனிநாடு என்பது அவர்களது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. கொலைகார சிங்களவர்களோடு சோந்து வாழ முடியாது. உரிமை பறித்தல், மறுத்தல், உயிர் மறுத்து கொலைசெய்தல், மிரட்டுதல் போன்ற செயல்பாடுகளை திட்டமிட்டு செயல்படுத்தும் சிங்களவர்களோடு இணைந்து வாழ்வது மிகவும் கடினமானது, ஆபத்தானது.
அதனால் தனி ஈழம் ஒன்று தான் தீர்வாக இருக்கமுடியம் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் தமிழர்கள். அந்த எதிர்பார்ப்பில், நம்பிக்கையில் மண்ணள்ளிப்போடு பல நாடுகள் உள்ளன. எதிர்காலத்தில் இவர்கள் இலங்கை வரலாற்றில் காணாமல் போய்விடுவர். தமிழர்களின் தாயகம் தனிஈழம் என்ற கனவு கனவாகவே இருந்துவிடப் போகிறது. தமிழன் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து நிற்கவேண்டுமென்றால் தனிநாடு என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்படவேண்டும்.
இறுதியாக, மேலே குறிப்பிட்ட ஆட்களும், கட்சிகளும் இன்று இவ்வாறு செயல்படுவதற்கு காரணம் என்னவென்று ஆராய்வதற்குமுன் அவர்களது வரலாற்றுச் செயல்பாடுகளை ஆராயவேண்டும். ஒவ்வொருவரும் தனிப்பட்ட வருமான நோக்கோடு வாழ்கின்றார். அதனால் ஆய்வாளர் அரூஸ் அரசியல் தெளிவுடன் இந்த திருத்தச் சட்டத்தை வெளிப்படுத்துகின்றார்.
இவர்கள் உலக நாடுகளையும், அமைப்புகளையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர். எனவே தமிழருக்கு உரிமை மறுக்கும் தரணியாக மாறிவருகிறது. ஒவ்வொருவரின் நிலைப்பாட்டையும் நோக்கத்தையும் நன்கு உணர்ந்து விடுதலைச் செயல்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.
தனிநாடு என்ற உணவு கொடுக்கவில்லை என்றாலும் தன்நிர்ணய உரிமை என்ற தண்ணீரையாவது கொடுக்க உலக நாடுகள் முன்வரவேண்டும். மலரட்டும் தமிழீம், மடியட்டும் சிங்கள பௌத்த பேரினவாதம்.