தமிழினப் படுகொலை : ஊர்திப் பவனி இன்று கொக்குவில் பகுதியிலிருந்து ஆரம்பம்

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம்  கொன்றழிக்கப்பட்டதை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை இளஞ்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும்  முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை  நினைவு படங்கள் தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12 ம் திகதி ஆரம்பமானது.

இந்நிலையில் ஊர்தியின் ஐந்தாவது நாள் பயணம் இன்று காலை கொக்குவில் பகுதியில் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து மருதனார்மடம் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டது. அங்கு அதிகளவான மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.