தமிழர் தலைநகர கடற்கரையில் சடலமாக கரையொதுங்கிய உயிரினங்கள்

திருகோணமலை கிண்ணியா உப்பாறு கடற்கரையில் நேற்று காலை உயிரிழந்த நிலையில் முதலை மற்றும் டொல்பின் மீட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர் .

இவ்வாறு மீட்கப்பட்ட முதலை 17 அடி நீளமுடையதென்றும் , டொல்பின் 06 அடி நீளமுடையதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது பெய்துவரும் கடுமையான மழை காரணமாக இந்த உயிரினங்கள் உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வன ஜீவராசி திணைக்கள அதிகாரிகளும், கடற்படை அதிகாரிகளும் விஜயம் செய்து விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.