தமிழர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது – மட்டுநகரான்

இலங்கையின் சட்டத்துறையானது இரண்டு வகையில் செயற்படுகின்றது என்பது இன்று நேற்றல்ல பல ஆண்டுகாலமாக அனைவருக்கும் தெரிந்த விடயம்.இலங்கையினைப்பொறுத்த வரைக்கும் இங்கு தமிழர்களுக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமே காணப்படுகின்றது.அதனை தமிழர்களும் கோருகின்றனர்.சிங்களவர்களினால் தமிழர்களுக்கு எந்தவிதமான நீதியையும் தரமுடியாது.

அதனால் தமிழர்கள் தங்களை தாங்களே ஆளும் நிலைமையினை ஏற்படுத்தும்போது தமிழர்களுக்கான நீதியை தமிழர்கள் எழுதிக்கொள்வார்கள்.

Kurunthur2 தமிழர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது - மட்டுநகரான்இன்று வடகிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமையென்பதை சர்வதேச சமூகம் வெறுமனே இலங்கைக்கு ஆலோசனை கூறுவதுடன் மட்டும் கடந்துசெல்லப்போகின்றதா என்பது கேள்வியாகவே இருக்கின்றது.இந்த நாட்டில் தமிழர்களுக்கு நீதித்துறையும் சுதந்திரமாக இயங்கமுடியாத நிலையும் ஊடகத்துறையும் சுதந்திரமாக செயற்படமுடியாத நிலைமையுமே தொடர்ந்து இருந்துவருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் தமிழர்கள் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகின்றார்கள் என்ற கேள்வி இங்கு எழுந்துநிற்கின்றது.கிழக்கினைப்பொறுத்த வரையில் இன்று நீதித்துறையானது தமிழர்களுக்கு எதிரான ஒரு நீதித்துறையாகவேயிருந்துவருகின்றது.இவ்வாறான நிலையில் எதிர்வரும் காலங்களில் தமிழர்களின் பகுதிகளில் பல்வேறு வகையான அத்துமீறிய செயற்பாடுகள் முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் தலைநகராகயிருந்ததுடன் ஏனைய மாவட்டங்களான அம்பாறை மாவட்டம்,மட்டக்களப்பு மாவட்டம் ஆகியவையிருந்தன.இதில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் முக்கிய பகுதியாக கல்முனையும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பகுதியாக மட்டக்களப்பும் இருந்தது.இப்பகுதிகளிலேயே அதிகளவு தமிழர்கள் வாழ்ந்தனர்.இன்று கிழக்கின் தலை நகராக திருகோணமலை இல்லாமல்சென்றுகொண்டிருக்கும் அதேநேரம் அம்பாறையின் தமிழரின் முக்கிய பகுதியாக கல்முனையும் இல்லாமல்போய்விட்டது.எஞ்சியிருப்பது மட்டக்களப்பு நகர் மட்டுமேயாகும்.

இன்று திருகோணமலையில் நினைவேந்தல் செய்யமுடியாத நிலைமை.தமிழர்களில் அடாத்தாக விகாரைகள் கட்டப்படும் நிலைமை,தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் பௌத்த தொல்பொருளாக அடையாளப்படுத்தப்படும் நிலைமை என திருகோணமலை நகர் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளை சிங்கள பௌத்த இடமாக மாற்றும் செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

thileepan 2023 1 தமிழர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது - மட்டுநகரான்திருகோணமலையில் முன்னெடுக்கப்படும் இந்த அத்துமீறிய செயற்பாடுகளுக்கு ஆபத்துகள் வந்துவிடும் என்பதற்காகவே திருகோணமலையில் முன்னெடுக்கப்படும் தமிழர்கள் சார்ந்து போராட்டங்களை தடுத்து நிறுத்தும் செயற்பாடுகள் பல வழிகளில் முன்னெடுக்கப்படுகின்றன.அண்மையில் திருகோணமலை நகரில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு பொலிஸார் நீதிமன்றம் ஊடாக முன்னெடுத்த தடை அத்துடன் திலீபனின் நினைவு ஊர்தி செல்லும்போது அதனை இடைமறித்த சிங்கள காடையர்கள் அதன்மீது மேற்கொண்ட தாக்குதல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் தமிழர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் இனமுறுகல் நிலையினை ஏற்படுத்தும் என அண்மையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்திருக்கின்றார்.

அவரும் சிங்கள பௌத்த கடும்போக்குவாதிகளை திருப்திப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளையே முன்னெடுப்பதாக இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் வார இதழ் ஒன்று கடுமையாக சாடியுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் கவனத்திற்கு…என்ற கோரிக்கையுடன் அதன் ஆசிரியர் தலையங்கத்தில் கிழக்கு மாகாண ஆளுனருக்கு பல்வேறு சாட்டையடி கொடுக்கப்பட்டுள்ளது.

Senthi thonda தமிழர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது - மட்டுநகரான்“திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளால் இனமுறுகல்கள் ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடைய கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து நிர்மாணிக்க இருக்கும் விகாரையின் பணிகள் ஆளுநரின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டன.

நிலாவெளி பெரியகுளம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களும் 02 சிங்கள குடும்பங்களும் வசித்து வருகின்றன.அங்கு வாழும் தமிழ் மக்கள் இவ்விகாரை நிர்மாண பணிகள் ஆரம்பிக்க இருப்பதை நிறுத்துமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் விகாரை நிர்மாணப்பணி தொடருமாக இருந்தால் இப்பிரதேசத்தில் பாரியதோர் இனமுறுகல் ஏற்படும் என்று  அதனை நிறுத்த ஆளுநர் உத்தரவிட்டாரே ?அந்த உத்தரவுக்கு என்ன ஆனது?

ஆளுநரின் தடையுத்தரவை மீறி திருகோணமலை பெரியகுளம் சந்தியில் பௌத்த கொடிகள்நடப்பட்டு சட்டவிரோத விகாரை கட்டுமானம் பொலிஸாரின் பாதுகாப்புடன் கடந்த 9 ஆம் திகதி   மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதே ? பொலிஸார் ஆளுநரின் உத்தரவை மதித்தார்களா? அல்லது சட்டவிரோதமாக கட்டப்படும் விகாரைக்கு முன்கூட்டியே சட்டப்படி அனுமதி பெறப்பட்டதா? அப்படியான அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக  மேற்கொள்ளப்பட்ட அந்த விகாரை நிர்மாணம் குறித்து நன்கறிந்த ஆளுநர் அப்படியான நிர்மாணம் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை குலைக்கும் என்று கருதியல்லவா அதனை நிறுத்தக் கோரியுள்ளார்?

திலீபன் நினைவுப்பேரணி அதனைவிடவா நல்லிணக்கத்தை சீர்குலைக்கப்போகிறது ? கிழக்கு மாகாண ஆளுநருக்கு தமிழர் போராட்டமும் வரலாறும் தெரியாமல் இருக்கலாம்.தெரியாத ஒன்றை தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது  ஒன்றும் தவறான விடயமும் அல்ல.ஆனால் விடயங்கள் தெரியாமல் விபரங்கள் புரியாமல் அவர் ஊடகங்களிடம் கருத்துரைப்பது அவருக்குள்ள அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையினையே காட்டுகிறது.

ஈழப்போராட்டத்தில் , தமிழர் விடுதலை கோரும் வேட்கையில் திருகோணமலைக்கென ஒரு தனித்துவம் உண்டு. தமிழர் தாயகத்தின் தலைநகராக திருகோணமலை கருதப்பட்டது.தமிழர் ஆயுதப்போராட்டத்தில் திருகோணமலை மண் பெற்றதை விட இழந்தது ஏராளம்.அந்த மண்ணில் நினைவேந்தலுக்கு பொலிஸ் அனுமதி பெற்று நடத்த வேண்டும் என்று கூறுவது எந்தவகையில் நியாயமானது? அப்படியே அனுமதி கேட்டாலும் கொடுக்கப்படுமா? அப்படியே வழங்கப்பட்டாலும் நடத்த விடுவார்களா? பொலிஸாரின் தடுப்பையும் மீறி  சாதாரண மக்கள் பொல்லுகளை ,ஹெல்மெட்களை கொண்டு தாக்கியதை ஆளுநர் கவனிக்கவில்லை போலும். இங்கே இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

திருகோணமலை பெரியகுளத்தில் விகாரை அமைக்கும் பணிகளுக்கு அனுமதி வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் மறுத்த நிலையில்,  மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்  ஓகஸ்ட் 28 இல் நடைபெற்றபோது  மாவட்டச் செயலகத்திற்கு வெளியே, பௌத்த மதகுருக்கள் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்தமதகுருக்கள், மாவட்டச் செயலகத்திற்குள் நுழைந்து, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை இடைநடுவே தடுத்து, அங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முறைப்படி அனுமதி பெற்றா பிக்குகள் உள்ளே வந்தனர்?அப்படி அத்துமீறியவர்கள் மீது சட்டம் பாய்ந்ததா?  இதே தமிழர்கள் எவராவது அபப்டி உள்ளே வந்திருக்க முடியுமா?அல்லது சட்டப்படி வரத்தான் அனுமதி கிடைத்திருக்குமா ?

ஆளுநர் என்பவர் அரசாங்கத்தின் சேவகர்.அது அனைவருக்கும் தெரியும்.ஆனால் ஜனநாயகத்தின்பால் , நீதியின் பேரால்  அவர் நியாயத்தின் பக்கம் நிற்கவேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கிறது. ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க அவருக்கு கடப்பாடு இருக்கிறது.

அதைவிடுத்து சட்டம் , ஒழுங்கு என்று பேசுவதன்மூலம் அரச இயந்திரத்தை  திருப்திப்படுத்த அவர் முயல்வாரானால் தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல வரலாறும் அவரை ஒருபோதும் மன்னிக்காது”என அந்த ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ellaavala in eastern with military தமிழர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது - மட்டுநகரான்கிழக்கில் இவ்வாறான நிலைமை ஏற்படும் என்பதை நாங்கள் முன்னே கூறியிருந்தோம்.கிழக்கு மாகாண ஆளுனர் எவ்வாறு செயற்பாடுகளை மேற்கொள்ளுவார் என்பதையும் தெரிவித்திருந்தோம்.இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழர்களின் நிலங்களை அபகரிப்பு செய்வதில் சட்டத்தினை நடைமுறைப்படுத்தாத நிலையே இருந்துவருகின்றது.

இரு தினங்களுக்கு முன்னர் கரடியானறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வனத்துறையினரால் கல் இடப்பட்ட பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கை முன்னெடுத்தாக தெரிவித்து தமிழ் விவசாயி ஒருவருக்கு ஏறாவூர் நீதிமன்றம் ஊடாக 20,20,000? ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

அதே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு,மாதவனை பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டு அங்கு சேனை பயிர்ச்செய்னை முன்னெடுக்கப்படுகின்றது.ஆனால் இதே வனத்துறையோ பொலிஸோ எந்தவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை.அவ்வாறானால் சட்டமானது தமிழர்களுக்கு ஒரு விதமாகவும் சிங்களவர்களுக்கு ஒருவிதமாகவும் செயற்படுவது உறுதியாகின்றது.

எனவே இந்த நாட்டில் தமிழர்களுக்கான நீதியையும் அவர்களுக்கான நிலம்தொடர்பான உரிமையினையும் பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது.இலங்கi அரசாங்கத்தினை பொறுத்தவரையில் தமிழர் பகுதிகளை அபகரிப்பதையே குறிகாக கொண்டுள்ளது.தமது சட்டங்களையும் நீதித்துறையினையும் அதற்காக பயன்படுத்திவருகின்றது.எனவே தமிழர்களுக்கான நீதியையும் உரிமையினையும் உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டியது அனைவரது கடமையுமாகும்.