தமிழக சட்டசபைத் தேர்தலில் தனிதுத்துமாக மிளிர்ந்த நாம் தமிழர்

தமிழக சட்டசபைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ள நிலையில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அதில் 117 ஆண்கள் 117 பெண்கள் என வேட்பாளர்களை களம் இறக்கிய சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி எவ்வித தொகுதியிலும் வெற்றிபெறாவிட்டாலும் பெற்ற மொத்த வாக்குகளினூடாக அதீத கவனத்தை ஈர்த்துள்ளது.

மூன்றாவது அதிக வாக்குகளைப் பெற்ற அணியாக அது தன்னை பலமாக அடையாளப்படுத்தியுள்ளது. ஏனைஏகடகய அணிகள் பல கட்சிகளின் கூட்டாக அமைந்து பலம் சேர்த்த போது தனியாக களம் கண்ட நாம் தமிழர் கட்சியின் வாக்குவங்கி அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. ஊடகங்களின் கவனத்தை கமலின் மக்கள் நீதிமையமும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகமும் அதிகம் பெற்றிருந்தாலும் அவற்றைவிட மூன்று மடங்கு வாக்குவங்கியை நாம் தமிழர் பெற்றுள்ளது.

அந்தவகையில் கட்சிகளும் ஈற்றில் தமிழகம் தழுவி அவை பெற்ற மொத்த வாக்குகளும் வருமாறு. இதில் பல கட்சிகள் தனித்துத் போட்டி போட்டிருந்தால் எத்தகையநிலையை அடைந்திருக்கும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. அத்துடன் திமுக அதிமுக வேறு ப ல கட்சிகளின் கூட்டாலேயே இவ்வெண்ணிக்கைகளை பெற்ற என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இந்நிலையை அடுத்த கட்டத்திற்கு மேலும்வலுநிலையாக மாற்ற எத்தகைய சாதுரியமான தொடர் செயற்பாட்டில் தன்னை வழிப்படுத்திக் கொள்ளப்போகிறது என்பதில் நாம் தமிழர் கட்சியின் எதிர்காலம் தங்கியுள்ளது.

திமுக – 1,56,85,421 (36.3%)

அதிமுக – 1,43,85,410 (3329%)

நாம் தமிழர் – 29,58,458 (6.85%)

காங்கிரஸ் – 19,06578 (4.41%)

பாட்டாளி மக்கள் கட்சி – 17,45,229 (4.04%)

பாரதீக ஜனதா கட்சி – 11,80,456 (2.73%)

அம்மா மக்கள் முன்றே;றக்கழகம் – 10,65,142 (2.47%)

மக்கள் நீதிமையம் – 10,58,847 (2.45%)

சீபிஜ – 5,04,037 (1.17%)

மதிமுக (வைகோ) – 4,86,979 (1.13%)

விடுதலைச்சிறுத்தைகள் – 4,57,763 (1.06%)

சிபிஎம் – 3,90,819 (0,9%)

தேமுதிக (விஜயகாந்த்) – 1,95,610 (0.45%)

நன்றி: நேரு குணரட்னம்