தமிழகத்திலுள்ள ஈழத்தமிழர் குடும்பங்களுக்கு ரூ.4000 நிவாரணம் வழங்கும் திட்டம் தொடக்கம்

252 Views

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர்கள் குடும்பத்திற்கு ரூ.4000 நிவாரணம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் 13,553 இலங்கை தமிழ் குடும்பங்கள் பலனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 கொரோனா நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு தற்போது இரண்டு தவணைகளாக கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் முகாம்களுக்கு வெளியே வாழும் இலங்கை தமிழர்கள் குடும்பத்திற்கு ரூ.4000 நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் முகாமிற்கு வெளியே வசிக்கும் இலங்கை தமிழ் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்கும் புதிய திட்டத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து ஐந்து நபர்களுக்கு வழங்கி முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல்வர் தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் ரூ.5,42,13,000 மதிப்பீட்டில்  முகாமிற்கு வெளியில் வசிக்கும் 13,553 இலங்கை தமிழ் குடும்பங்கள் பலனடைய உள்ளனர்.

திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு அடையாளமாக 5 பேருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார். இந்த திட்டத்தின் மூலம் 13,553 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.5.42 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது.

Leave a Reply