தனிச் சிங்கள மொழியில்  வழிகாட்டல் கடிதங்கள் – நெருக்கடியில் தமிழ் பாடசாலைகள்

தமிழ் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அறிவுறுத்தல் தொடர்பான கடிதங்கள் தனிச் சிங்களத்தில் இருப்பதால் அதில் உள்ளவற்றைப் புரிந்துகொள்வதில் சிரமங்கள் இருப்பதாக தென் மாகாண தமிழ் பாடசாலை அதிபர்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 1,11,13 ஆம் வகுப்புக்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் ஏனைய மாகாணங்களில் சகல வகுப்புகளிலும் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்நிலையில், தமிழ்மொழியை பிரதான மொழியாகக் கொண்டு செயற்பட்டு வரும் பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கும் அறிவுறுத்தல் கடிதங்கள் அனைத்தும் தனிச் சிங்களத்தில் உள்ளது. அதனால் பாடசாலை அதிபர்கள் பல நெருக்டிகளை சந்தித்து வருகின்றனர் என்று கூறியுள்ளனர்.