ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலையடுத்து, சிறிலங்காவின் நிலைமைகள் பதட்டமாக காணப்பட்டதையடுத்து, அநேக நாடுகள் தங்கள் மக்களை சிறிலங்கா செல்ல வேண்டாம் என எச்சரித்திருந்தது. இந்த வகையில் இந்தியாவும் தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த அறிவித்தலை விடுத்திருந்தது.
இந்நிலையில் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அண்மையில் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து. சில நாடுகள் இந்த எச்சரிக்கையை தளர்த்தியிருந்தன. இச்சந்திப்பில் சிறிலங்காவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், பயண தடை எச்சரிக்கையை விலக்கிக் கொள்ளுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வகையில் இந்தியாவும் தனது நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தியிருந்த பயணத் தடையை தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இதனிடையே, இந்தியாவின் இந்த முயற்சி தனது மக்களைப் பலி கொடுத்து சிறீலங்காவைக் காப்பாற்றும் முயற்சியாகும் என அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதும் சிறீலங்காவில் கைதுகள் மற்றும் தேடுதல்கள் நடைபெறுவதாகவும், குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள உதவிய அரசியல்வாதிகள் தற்போதும் பதவியில் இருப்பதால் சிறீலங்காவில் இன்னும் ஆபத்துக்கள் நீங்கவில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.