டெல்லி எல்லையில் 7 ஆவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

728 Views

இந்திய மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் இன்று 7-வது நாளாக கடுங்குளிரிலும் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. மத்திய அரசுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மத்திய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் பயன் என்பது விவசாயிகளின் கருத்து. ஆகையால் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் 96,000 டிராக்டர்கள் மற்றும் 12 மில்லியன் (1.2 கோடி) விவசாயிகள் மற்றும் பலர் இந்திய தலைநகரின் எல்லையில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாகன ஓட்டிகளுக்கு மாற்றுப் பாதையை அறிவித்துள்ளனர்.

இந்தப் போரா128189931 1753520271490658 2742217472537289441 n டெல்லி எல்லையில் 7 ஆவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்ட்டங்களின் அடுத்த கட்டமாக டெல்லி சலோ போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள், மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியை நோக்கி படையெடுத்தனர். டிராக்டர்களிலும் நடந்தும் பல இலட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டனர். டெல்லியின் எல்லையிலும் டெல்லி புராரி மைதானத்திலும் இரவு பகலாக கடந்த 7 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெற்கு டெல்கியில் உள்ள புராரி மைதானத்திற்குச் சென்ற பின்பு தான் பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கோரிக்கையை விவசாயிகள் அமைப்பு ஏற்க மறுத்து விட்டன. நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு மட்டும் சம்மதிப்பதாகவும் தெரிவித்துள்ளன.

டிசம்பர் 3ஆம் திகதி விவசாயிகள் சங்கப் பிர127729888 1753520228157329 2906621155973904501 n டெல்லி எல்லையில் 7 ஆவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்திநிதிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்த முன்னர் புராரி மைதானத்திற்கு விவசாயிகள் செல்ல வேண்டும் என்ற அமித்ஷாவின் வேண்டுகோளை விவசாயிகள் நிராகரித்திருந்தனர். புராரி மைதானம் என்பது திறந்தவெளிச் சிறைச்சாலை போன்றது என்றும் அங்கு செல்ல முடியாது என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

தங்களைப் பொறுத்தவரை மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் கோரிக்கை எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் மீண்டும் நாளையும் மத்திய அரசுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, பல கட்டங்களாக தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இன்று (புதன்கிழமை) கூட தமிழ்நாட்டில் 400-500 இடங்களில் விவசாயிகள் சங்கம் விவசாயிகளைத் திரட்டிப் போராட்டம் நடத்தினர்.

இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவலாகி வருவதுடன், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்படியும் கேட்டு பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருவது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply