மூத்த பத்திரிகையாளா் வீ.தனபாலசிங்கம் நோ்காணல்
ஜனாதிபதித் தோ்தலை இலக்காகக் கொண்ட நகா்வுகள் கொழும்பு அரசியலில் தீவிரமடைந்திருக்கும் நிலையில், புதுடில்லிக்கான விஜயத்தை ஜே.வி.பி.யின் உயா்மட்டக்குழு ஒன்று மேற்கொண்டுள்ளது. ஆரம்பம் முதல் இந்திய எதிா்ப்பு என்பதையே தமது ஆயுதமாகக் கொண்டிருந்த ஜே.வி.பி.யின் தலைவா்கள் இந்தியாவில் முக்கிய அமைச்சா்கள், அதிகாரிகளுடன் பிரத்தியேகப் பேச்சுக்களை நடத்திவருவது அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் பின்னணியில் உள்ள இராஜதந்திரம் என்ன? தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும், மூத்த ஊடகவியலாளருமான வீரகத்தி தனபாலசிங்கம் இது குறித்து பேசுகின்றாா்.
கேள்வி – ஜே.வி.பி.யினருடைய இந்திய விஜயம் எந்தவகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக நீங்கள் கருதுகிறீா்கள்?
பதில் – இந்த வாரத்தில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கியமான நகர்வாக அரசியல் மட்டத்திலும் ஊடகங்களிலும் பிராந்திய மட்டத்திலும் நோக்கப்படும் ஒரு விடயமாக ஜேவிபியின் முக்கியமான தலைவர்கள் இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அந்த நாட்டுக்கு சென்று இருக்கின்றார்கள். இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று அவர்கள் அங்கு சென்றுள்ளார்கள் என்பது முக்கியமாக நோக்கப்பட வேண்டியது.
இலங்கையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் பொதுவாக இந்தியாவிலுள்ள இடதுசாரி கட்சிகளின் தோழமை அழைப்பை ஏற்று அங்கு செல்வது தான் வலிமையாக இருந்துள்ளது. இந்த வகையில் ஜேவிபி என்னுடைய புதிய தலைவர்கள் கடந்த காலங்களிலும் இந்தியாவுக்கு சென்று வந்துள்ளார்கள் அது அங்கு இருக்கக்கூடிய இடதுசாரி கட்சியுடன் அவர்களுக்கு இருக்கக்கூடிய தோழமையான அழைப்பு.
ஆனால் இப்போது அனுரா குமார திசாநாயக தலைமையிலான குழுவினர் இந்திய அரசாங்கத்தினுடைய உத்தியோபூர்வமான அழைப்பை ஏற்று அங்கு சென்று இருக்கின்றார்கள். இதுதான் இப்போது முக்கியத்துவம் பொறுகின்றது. தற்போது இலங்கை ஆனது ஜனாதிபதி தேர்தலில் ஒன்றுக்கு என்னை தயார்படுத்தி வரும் நிலைமையில் இந்த விஷயம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதும் இதன் முக்கியத்துவத்தை மேலும் உணா்த்துகிறது.
ராஜபக்ஷக்களின் தவறான பொருளாதார அணுகுமுறைகள் காரணமாக உருவாகிய நெருக்கடி அதனால் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சி போன்றவற்றை மிகவும் சாதுரியமாக பயன்படுத்தி தங்களுடைய செல்வாக்கை உயர்த்திக் கொண்ட ஒரு கட்சியாக ஜேவிபி நோக்கப்படுகின்றது. தற்போது மேற்கொள்ளப்படும் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் அந்த காட்சிதான் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கை பெற்றுள்ள கட்சி என்பதை வெளிப்படுத்தி வருகின்றன. ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமனவோ பின்னணியில் இருப்பதாகத்தான் கருத்து கணிப்புக்கள் வாக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சத்தி இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பொதுவாகவே ஜே வி பி யின் கூட்டங்களுக்கு மக்கள் திரள்வார்கள் ஆனால் தேர்தல் என்று வரும்போது அந்தப் பெரும் கூட்டம் வாக்குகளாக மாறியதாக இதுவரையில் வரலாறு இல்லை. ஆனால் இப்போது பழைய பாணியிலேயே நாங்கள் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்பதுதான் நிலைமை. இவ்வாறான ஒரு பின்னணியில் இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் இப்போது செயல்படும் ஜேவிபி முக்கியமான பாத்திரம் ஒன்றை வகிக்கக்கூடிய நிலைமையில் இருப்பதாக இந்தியா கருதுகிறதா என்பதுதான் இப்போதும் எழும் முக்கியமான கேள்வி.
அவ்வாறு இந்தியா நோக்கவில்லை என்றால் அவர்களை இந்தியாவிற்கு அழைத்து பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டிய சூழ்நிலை தோன்றியிருக்காது. ஜேவிபியுடன் இந்திய தலைப்பில் நடத்திய பேச்சு வார்த்தைகளை பார்க்கும் போது அரசாங்கத்திற்கு வரப் போகின்ற ஒரு தரப்புடன் எவ்வாறு பேசுவார்களோ அந்த வகையில் தான் அவருடைய பேச்சு வார்த்தையால் இடம் பெற்று இருக்கின்றது. பிராந்திய பாதுகாப்பு, பொருளாதாரம் நிலவரங்கள் இலங்கையின் எதிர்காலம் போன்ற விடயங்களை குறித்து இந்திய மொழி விவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு செயலாளர், வெளிவிவகார செயலாளர் ஆகியோர் ஜேவிபி தலைவர்களுடன் பேசி இருக்கின்றார்கள்.
அதனைவிட Observer foundation என்ற சிந்தனைக் குழாயிலிருந்த பிரமுகர்களும் அவர்களைச் சந்தித்து பேச்சு வார்த்தைகளை நடத்தி இருக்கின்றார்கள்.
இத்தகைய ஒரு பின்னணியில் இலங்கையில் இருக்கக்கூடிய அரசியல் சக்திகள், மக்கள், பல்வேறு சிவில் சமூக அமைப்புகள், அரசியல் விவகாரங்களில் ஈடுபாடு கொண்டு தயப்புகள் எல்லாம் தேசிய மக்கள் சக்தி தலைவர்களுக்கு இந்தியா கொடுக்கும் முக்கியத்துவத்தை ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது.
ஜேவிபியை பொறுத்தவரையில் ஒரு இந்திய எதிர்ப்பு அமைப்பாகவே அது பார்க்கப்பட்ட வந்தது. இந்த கட்சியை அழைத்து இந்தியா பேச்சு வார்த்தைகளை நடத்துகிறது என்பது ஜேபிபி யின் கடந்த காலத்தையிட்டு இந்தியா பொருட்படுத்த தயாராகவில்லை என்பதையே உணர்த்துகிறது. அரசியல் பொருளாதார மற்றும் பல்வேறு விடயங்களில் ஜேவிபியின் போக்கில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானித்ததன் பின்புலத்தில் தான் அவரால் ஜேவிபியை புது டில்லிக்கு அழைத்திருக்க வேண்டும்.
இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு ஜேவிபி தலைவர்கள் தொண்டு திரும்பிய பின்னர் சொல்லக்கூடிய கருத்துக்களின் அடிப்படையில்தான் அடுத்தவற்றை நோக்கக் கூடியதாக இருக்கும்.
இதனை பொருத்தவரையில் இரண்டு விடயங்களை தான் நோக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஜேவிபி கடந்த கால இந்தியா எதிர்ப்பு நிலைப்பாடு அவர்களுக்கு இப்போது ஒரு பிரச்சினையாக இல்லை. இரண்டாவது இலங்கையின் எதிர்கால அரசியலை நிர்மாணிப்பதில் ஒரு தீர்க்கமான சக்தியாக ஜேவிபி இருக்கும் என்று இந்தியா கருதுகின்றார்கள் என்றும் சொல்ல முடியும்.
கேள்வி – ஜேவிபி அமைப்பை பொருத்தவரையில் 1971 ஆம் ஆண்டு முதலாவது புரட்சிச்சியை மேற்கொண்ட போதும் பின்னர் இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த காலத்தில் இரண்டாவது கிளர்ச்சியை அவர்கள் முன்னெடுத்த போதும் இந்திய எதிர்ப்பு வாதத்தை முன் வைத்திருந்தார்கள். ஜேவிபி பொருத்தவரை தங்களுடைய கட்சியை வளர்த்துக் கொள்வதற்கு இந்திய எதிர்ப்பு வாதம் என்பது அவர்களுக்கு அந்த காலத்தில் தேவையாக இருந்ததற்கு என்ன காரணம்?
பதில் – ஜேவிபி என்பது 1969 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி. அதனுடைய ஆரம்பத்தை நாம் பார்த்தால், சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியினுடைய வாலிபர் முன்னணியின் முக்கிய உறுப்பினராக இருந்தவர்தான் றோஹண விஜயவீர. அந்தக் கட்சியில் இருந்து அவர் பின்னர் வெளியேறினார். வெளியேறித்தான் ஜே.வி.பி.யை ஆரம்பித்தாா். தமிழா் பிரச்சினையைப் பொறுத்தவரையில் கூட சிங்கள தேசியவாதத்தை வெளிப்படுத்திய ஒருவராகத்தான் அவா் கம்யுனீஸ்ட் கட்சியில் இருந்த போது கூட செயற்பட்டாா். அவா் ஆரம்பகாலத்திலேயே தமிழா்களுடைய நியாயமான அபிலாஷைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தவா்.
இடைப்பட்ட காலத்தில் அவா் தமிழா்களுடைய சுயநிா்ணய உரிமை குறித்தும் பேசியிருக்கின்றாா். ஆனால், அவையெல்லாம் நிலையானதாக இருக்கவில்லை. அவா்களிடம் நிலையாக இருந்தது எதுவென்றால், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீா்வைக்காண்பதற்கான முயற்சிகளை எப்போதும் எதிா்த்து வந்ததுதான்.
அந்த வகையில் தான் அவர்கள் நடத்திய ஐந்து முகப்புக்களில் ஒன்று இந்திய விஸ்த்தரிப்பு வாதம் என்பது தொடர்பாக போதிக்கப்பட்டது. இலங்கைப் பொருத்தவரையில் பாட்டாளி வர்க்கம் என்றால் அது மலையக தோட்ட தொழிலாளர்கள் தான் பொருத்தமாக இருக்கும். இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற நிலைமையில் வாழ்ந்து வந்தவர்கள் அவர்கள். அந்த மக்களையே இந்தியாவினுடைய ஐந்தாம் படை என ஜேவிபி அடையாளப்படுத்தியது. இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் ஒரு கருவியாக தான் அவர்கள் மலையக மக்களை நோக்கினார்கள்.
அதற்கு மேலாக மலையாளத்தில் இருக்கின்ற தேயிலைச்செடிகளை பிடுங்கி விட்டு அதற்கு பதிலாக உருளைக்கிழங்கு போன்றவற்றை பயிரிட்டு சிங்கள தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்போம் என்ற கோஷத்தை அவர்கள் முன் வைத்தார்கள். சிங்கள பௌத்த சமூகத்திடம் இந்தியா குறித்த ஒரு பயம் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது. அந்தப் பயத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகின்ற ஒரு அரசியலை அவர் முன்னெடுத்தார்.
என்ன பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக முன்னெடுக்கப்பட்ட எந்த ஒரு முயற்சியையும் ஜேவிபி ஆதரித்தது இல்லை.
இலங்கை – இந்திய உடன்படிக்கை தொடர்ந்து மாகாண சபைகள் கொண்டுவரப்பட்ட போது, தங்களுடைய இரண்டாவது கிளர்ச்சியை ஜேவிபி மேற்கொண்டது. அமல் செயற்பட்ட அவர்கள் பின்னர் மாகாண சபைகளில் பங்கேற்கின்ற ஒரு நிலைமையும் உருவாகியது. சிங்கள பௌத்த கருத்தியலை முன்னெடுக்கும் ஒரு குட்டி முதலாளித்துவ கட்சியாகவே ஜேவிபி செயல்பட்டது. அதன் விளைவாகவே இந்திய வஸ்தரிப்பு வாதம் என்ற கருத்தை அவர்கள் முன்வைத்தார்கள்.
ஆனால் உண்மை காலத்தில் சிங்கள மக்கள் மத்தியில் உருவாகியிருக்கின்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நிலைமைகளுக்கு ஏற்ப தாங்கள் மாறி கொள்வதாக அவர்கள் சொல்லிக் கொள்கின்றார்கள். இந்தியாவினால் அரவணைக்கப்படுகின்ற ஒரு சக்தியாக இன்று அவர்கள் மாறி இருப்பது பெரிய ஒரு மாற்றம் என்று தான் சொல்ல வேண்டும். சிங்கள மக்கள் மத்தியில் இயல்பாகவே காணப்படுகின்ற இந்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் மூலமாகவே தங்களுடைய இந்திய ஸ்தரிப்பு வாதம் போன்ற கருத்துக்களை அவர்கள் முன் வைத்தார்கள்.
தமிழர் பிரச்சனைக்கான தீர்வு உட்பட பல்வேறு விடயங்களிலும் அவர்களுடைய நிலைப்பாட்டில் அவ்வாறான மாற்றங்கள் இடம்பெற்றிருக்கிறது என்பதை அவர்கள் நாடு திரும்பிய பின்னர் முன்வைக்கக்கூடிய கருத்துக்களில் இருந்து தான் நாங்கள் அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும்.