ஜே.பி.வி. தலைவா்களை சந்தித்த அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனல்ட் லூ

12 ஜே.பி.வி. தலைவா்களை சந்தித்த அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனல்ட் லூதெற்கு, மத்திய ஆசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனல்ட் லூ மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று கோல்பேஸ் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் திருமதி ஜுலி சங் வும் கலந்துகொண்டார். தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், வசந்த சமரசிங்க மற்றும் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர்.

11 1 ஜே.பி.வி. தலைவா்களை சந்தித்த அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனல்ட் லூஇலங்கையின் நடப்பு பொருளாதார நிலைமை, சர்வதேச நாணய நிதியத்தின் இடையீடு, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துதல் மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி இதன்போது இருதரப்பினரதும் கவனம் செலுத்தப்பட்டது.