ஜெனிவா பிரேரணை மீது இன்று விவாதம் – வாக்களிப்பு இன்று மாலை அல்லது நாளை

606 Views

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா குறித்த தீர்மானம் இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் அதேவேளையில், இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்து தன்னுடைய நிலைப்பாட்டை இன்று அறிவிக்கும்.

இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை மாலை பெரும்பாலும் இடம்பெறும். போதிய நேரம் கிடைக்காவிட்டால் வாக்களிப்பு நாளை நடைபெறும்.

பிரேரணையை கடுமையாக எதிர்ப்பதென்ற தீர்மானத்தை எடுத்துள்ள சிறிலங்கா நேச நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான இராஜதந்திர முயற்சிகளை இறுதித் தருணம் வரையில் மைற்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்த இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply