ஜெனிவாவில் இந்தியா நடுநிலை வகித்தாலும் கனதியான செய்தியை சொல்லியுள்ளது – சிறிதரன்

ஜெனிவா தீர்மானம் தொடர்பில் இந்தியா நாடு நிலைமை வகித்திருந்தாலும் இம்முறை கனதியான செய்தியை சொல்லியுள்ளது. இலங்கையில் ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றது. இந்தப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இலங்கையினுடைய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான தமிழ் மக்களுடைய சுயாதிபத்தியத்தையும் சுயாட்சியையும் வலியுறுத்தக்கூடிய வகையில் ஒரு தீர்வை முன்வையுங்கள் என இந்தியா வலியுறுத்தியுள்ளமையை காலத்தினுடைய கனதியான செய்தியாக நாம் பார்க்கின்றோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் nதிவித்தவை வருமாறு:

“இலங்கையில் வடக்கு கிழக்கில் வாழ் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைகளுக்கான, அவர்கள் மீது புரியப்பட்ட போர் குற்றங்களுக்கு எதிரான, அவர்களுக்கு நீதிக்கு புறம்பாக நடைபெற்ற கொலைகளுக்கு எதிராக, சொத்தழிவுகளுக்கு எதிராக ஒரு நீதி வேண்டும் என்ற அடிப்படையில்தான் கடந்த 12 ஆண்டுகளாக ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுக்கொண்டு வருகின்றன.

இந்த தீர்மானகள நிறைவேற்றப்படுவதற்கு இலங்கையில் கூட கடந்த காலங்களில் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்சவுடைய காலத்தில் நல்லிணக்க ஆணைக்குழு ஊடாக சில தீர்வுகளைத் தருவதாக ஒரு குழு நியமிக்கப்பட்டது. பரணவிதான தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த இரு ஆணைக்குழுக்களுமே அரசினால் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு செயலிழந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டன. நல்லிணக்க ஆணைக்குழுவில் சொல்லப்பட்ட எந்த விடயங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. நாநக்ள் அதனை ஏற் றுக்கொள்ளவுமில்லை. பரணவிதான ஆணைக்குழு வும் தன்னுடைய அறிக்கையின் ஊடாக நாட்டில் எ தனையாவது நடைமுறைப்படுத்தியதாக வரலாறு இல்லை.

இலங்கையினுடைய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான தமிழ் மக்களுடைய சுயாதிபத்தியத்தையும் சுயாட்சியையும் வலியுறுத்தக்கூடிய வகையில் ஒரு தீர்வை முன்வையுங்கள் என இந்தியாவின் பிரதிநிதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பேசியுள்ளார். இது காலத்தினுடைய கனதியான செய்தியாக நாம் பார்க்கின்றோம்.

இந்திரா இந்தியப் பிரதமராக இருந்த காலப்பகுதியில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைககளை மனிதக்குற்றங்களை வெளியுலகுக்கு கொண்டு வந்ததும் இலங்கையில் ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதனை வெளியுலகுக்கு கொண்டு வந்ததும் அவருடைய காலம். இப்போது மீண்டும் இந்தியப்பிரதமர் மோடி தலைமையில் இந்திய அரசு இதனை மீண்டும் சர்வதேச தளத்தில் வெளியில் கொண்டு வந்துள்ளது மிக முக்கியமானது” எனத் தெரிவித்தார்.