ஜனாதிபதியே நான் பாதுகாப்புச் சபைக்கு கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தடைசெய்தார்- பூஜித ஜயசுந்தர

279 Views

ஜனாதிபதியே  பாதுகாப்புச் சபைக்கு கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தடைசெய்தார்- பூஜித ஜயசுந்தர

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியங்களை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று வழங்கினார்.

இதன்போது, பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தேவையில்லை என, அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கபில வைத்தியரத்ன தனக்கு வாய்மூல அறிவித்தலை விடுத்ததாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர கூறினார்.

அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர , இடமாற்றம் தொடர்பான விவகாரம் ஒன்றுக்காக ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அன்று பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அதன் பிறகு பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன தன்னிடம் தெரிவித்ததாகவும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அங்கு சாட்சியமளித்தார்.

Leave a Reply