சுமந்திரன் மீது நடவடிக்கை எடுங்கள்: சம்பந்தன், மாவையை வலியுறுத்தும் குலநாயகம்

193 Views

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வழங்கிய செவ்வி தொடர்பில் முழுத்தமிழ் உலகமும் அதிக விரக்தி அடைந்துள்ளது. எனவே, எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமது கட்சிக்கு ஏற்படக்கூடிய பின்னடைவைத் தவிர்க்க சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மிகவும் அவசியமாகின்றது” என வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா ஆகியோருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார் இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் சூ.சேவியர் குலநாயகம்.

இலங்கை அரசியலில் தமிழனத்தின் சார்பாக முக்கிய வகிபாகம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, சுமந்திரனின் போக்குக்கு விட்டுக்கொண்டு போனால் கட்சி மட்டுமல்ல தமிழினமே தேய்ந்து போகும் எனவும் அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply