சுதந்திரக் கட்சித் தலைவராக மைத்திரி பதவியேற்றார்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சி பெரும்பான்மை உறுப்பினர்கள் கோத்தபயா ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவித்திருந்த போதும், மைத்திரிபால சிறிசேன நடுநிலை வகிப்பதாக அறிவித்திருந்தார்.

இதனால் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை அக்கட்சியின் பதில் தலைவராக மூத்த உறுப்பினர் ரோஹண லக்ஸ்மன் பியதாச நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் இன்று(19) சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் வரவிருக்கும் பொதுத் தேர்தல், பிரதேச சபை தேர்தல் மற்றும் சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன கூட்டணியின் கீழ் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.