சீனா அதிபருடன் கோட்டா உரையாடல் – பொருளாதாரத்தில் சிறீலங்காவை முன்னேற்ற திட்டம்

சிறீலங்காவை பொருளாதாரத்தில் முன்னேற்ற தாம் உதவி செய்வதாகவும், இரு நாடுகளும் இணைந்து செயற்படப்போவதாகவும் சீனா அதிபர் சிறீலங்கா அதிபர் கோட்டாபாயா ராஜபக்சாவிடம் தெரிவித்துள்ளார்.

இன்று (29) சிறீலங்கா அதிபரை தொலைபேசியில் தொடர்புகொண்ட சீனா அதிபர் ஜி ஜின்பிங் அவர்கள் சிறீலங்காவின் கல்வி, வான் போக்குவரத்து ஆகிய துறைகளுக்கு சீனா உதவிகளை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் நீதி தொடர்பில் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும், ஐக்கிய நாடுகள் சபையில் சீனா உறுப்புநாடாகுவதற்கு ஆதரவாக சிறீலங்கா வாக்களித்ததற்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

சீனாவின் பொதுவுடமைக் கட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள சிறீலங்கா அதிபர், சீனாவின் வழியை பின்பற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பின்னர் சீனா அதிபர் சிறீலங்கா அதிபருக்கு தொலைபேசி எடுத்துள்ளது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கத்தை காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.