சீனாவில் பரவிவரும் புதிய வைரஸ் – சிறீலங்காவையும் தாக்கும் அபாயம்

மிகவும் ஆபத்தான வைரஸ் கிருமிகள் சீனாவில் பரவி வருவதுடன், அதனால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் குபே மாநிலத்தில் உள்ள வூகான் பகுதியில் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைரஸ் கிருமிகள் வேறு நாடுகளுக்கும் பரவும் ஆபத்துக்கள் உள்ளபோதும், சிறீலங்கா மக்களை பெருமளவில் தாக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் நூறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனா மக்கள் சிறீலங்காவுக்கு வருகை தருவதால் இந்த ஆபத்துக்கள் அதிகம் என நம்பப்படுகின்றது.

இந்த வைரஸ் கிருமிகள் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றாது என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளபோதும் அது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் என கொங் கொங் நாட்டின் நுண்ணுயிர் ஆராட்சியாளர்கள்

தெரிவித்துள்ளனர். இதுவரையில் 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 11 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் சீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்றவையே இதன் அறிகுறிகளாகும். 2003 ஆம் ஆண்டு சீனாவில் பரவிய சார்ஸ் வைரஸ் 37 நாடுகளுக்கு பரவியதுடன், 774 பேர் பலியாகியிருந்தனர், 8000 பேர் பதிக்கப்பட்டிருந்தனர். கொங்கொங் நாட்டில் மட்டும் 299 பேர் பலியாகியும், 1755 பேர் பாதிக்கப்பட்டும் இருந்தனர்.

அதனைப் போலவே இந்த வைரஸ் கிருமியும் மக்களைத் தாக்கலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது.