சீனாவிடம் இருந்து இலங்கை விமானப்படைக்கு புதிய விமானங்கள்

சீனாவிடம் இருந்து இலங்கை விமானப்படை இரண்டு தரமுயர்த்தப்பட்ட வை-12 ரக இரட்டை இயந்திரம் கொண்ட விமானங்களை பெற்றுள்ளது.

Harbin Y 12 IV twin engine turboprop சீனாவிடம் இருந்து இலங்கை விமானப்படைக்கு புதிய விமானங்கள்2019 ஆம் ஆண்டு இலங்கைக்கும் சீனாவின் தேசிய வான்போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகளை தொடர்ந்து இலங்கை இந்த விமானங்களை கொள்வனவு செய்துள்ளது.

இலங்கையிடம் வை-12 இரண்டு ரக விமானங்கள் 12 இருந்தபோதும் அதில் 3 விமானங்கள் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களில் சிக்கி அழிவடைந்திருந்தன. தற்போது அது வை-12 நான்கு ரக விமானங்களை பெற்றுள்ளது.