சீனக்குடா இளைஞர்களுக்கான சமாதானம் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் செயலமர்வு

IMG 20240208 WA0024 சீனக்குடா இளைஞர்களுக்கான சமாதானம் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் செயலமர்வுஇளைஞர்களிடையே சமாதானம் , மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் நோக்கிலான செயலமர்வு எழுத்தாணி பவுண்டேஷன் நிறுவனத்தால் கடந்த 5ம் திகதி அன்று திருகோணமலையில் தனியார் விடுதியில் இடம்பெற்றது.

எழுத்தாணி பவுண்டேஷன் அமைப்பின் பணிப்பாளர் வடமலை ராஜ்குமார் தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வின் வளவாளர்களாக திருகோணமலை மாவட்டத்தில் வளர்ந்து வரும் பயிற்றப்பட்ட இளம் வளவாளர்களாக P.சுதர்சன் ,உதயராஜ் தருணிக்கா, K.G. ஹர்ஷ ஆகியோரால் நடாத்தப்பட்டது.

சீனக்குடா மற்றும் அதனை அண்டிய கிராமங்களைச் சேர்ந்த மூவின இளைஞர்கள் மதத் தலைவர்கள் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பெண்கள் அமைப்புக்கள், சமாதான நீதவான்கள் இச் செயலமர்வில் கலந்து கொண்டனர்.

இச் செயலமர்வின் போது அடிப்படை மனித உரிமைகள் மற்றும் நமது அடையாளங்களை பாதுகாத்தல் , வன்முறை அற்ற தொடர்பாடல் திறன் போன்ற தலைப்புகளில் இச் செயலமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

IMG 20240208 WA0002 சீனக்குடா இளைஞர்களுக்கான சமாதானம் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் செயலமர்வு IMG 20240208 WA0029 சீனக்குடா இளைஞர்களுக்கான சமாதானம் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் செயலமர்வு