சிறீலங்காவுக்கு எதிராக செயற்பட மாட்டோம் – இந்தியா

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா அரசுக்கு எதிராக தாம் எதனையும் செய்யப்போவதில்லை என இந்தியா தெரிவித்துள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்தியா வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமா என்பதை தெரிவிக்கவில்லை. ஆனால் சிறீலங்காவுக்கு எதிராக செயற்படப்போவதில்லை என மட்டும் தெரிவித்துள்ளது.

தீர்மானம் தொடர்பான இணைக்குழு நாடுகளின் கலந்துரையாடல்களிலும் இந்தியா கலந்துகொள்ளவில்லை. ஆனால் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுமாறு தொடர்ந்து கூறி வருகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பிராந்திய கொள்கலன் கையாளும் பகுதி உடன்பாட்டில் இருந்து இந்தியாவை சிறீலங்கா வெளியேற்றியது தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் விரிசல் எற்பட்டுள்ளது நாம் அறிந்ததே.

இதனிடையே நான்கு நாள் பயணமாக இந்திய தூதுவர் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளுக்கு சென்றுள்ளார், அவர் அங்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.