சிங்கள ஆக்கிரமிப்பின் – சத்தமில்லா இனக்குறைப்பு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் இன்னொரு வடிவமே – நிலவன்

உலக மக்கள்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2009 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 7,024,000,000 அதாவது ஏழு பில்லியன் பேர் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. 11.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு உலக மக்கள் தொகை 7,716,834,712. கடந்த பத்து ஆண்டுகளில் 700 மில்லியன் கூடி இருக்கிறது. 2050-ஆம் ஆண்டில் 8 முதல் 10.5 பில்லியன் வரை கூடிச் செல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 1990-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உலகின் பிறப்புக்கள் வருடத்திற்கு 173 மில்லியனாக இருந்தது. 2010-ஆம் ஆண்டுகளில் 140 மில்லியன் என்ற அளவில் குறைந்து இருக்கிறது. மக்கள் தொகையில்  30 பில்லியன் பிறப்புக்கள் குறைந்து உள்ளன.

இலங்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய அமைதியற்ற சூழ்நிலை காரணமாக 1991ஆம் ஆண்டில் தொகைமதிப்பினை நடாத்த முடியவில்லை என்பதுடன் 20 வருடங்களின் பின்னர் 2001 இல் நடாத்தப்பட்ட தொகைமதிப்பு நாட்டின் 25 மாவட்டங்களில் 18 மாவட்டங்களுக்கு மட்டும் எல்லைப்படுத்தப்பட்டது. 2012 தொகைமதிப்பானது 31 வருடங்களின் பின்னர்; வடக்கு மற்றும் கிழக்கு உள்ளடங்கலாக முழு இலங்கையிலும் முழுமையான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட தொகைமதிப்பாகும்.

2012ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை  2 கோடியே இரண்டு லட்சத்து 63,723 எனத் கூறப்பட்டுள்ளது. இதில் ஒரு கோடியே 51 லட்சத்து 73,820 பேர் சிங்களர்கள். 31 லட்சத்து 13 ஆயிரத்து 247 பேர் தமிழர்கள். 18 லட்சத்து 69,820 பேர் சோனகர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33,061 பேர் பர்கர் இனத்தவர்கள். 40,189 பேர் மலே இனத்தவர்கள். என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரங்கள் துறை தெரிவித்துள்ளது. இலங்கையின் வடக்கில் 997,754 பேர் காணப்படுவதாகவும், இதில் 934,392 பேர் தமிழ் மக்கள் எனவும் இக் கணக்கெடுப்பின் மூலம் அறியமுடிகின்றது. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 21,860 சிங்களவர்களும், 32,659 முஸ்லீம்களும் வாழ்கின்றனர். தமிழ் மக்களின் சனத்தொகை வீழ்ச்சிக்குரிய முக்கிய காரணிகள் போரினால் ஏற்பட்ட இடம்பெயர்வும்  உயிரிழப்புக்களும், திட்டமிட்ட இனக்குறைப்பும் ஆகும்.

அம்பாறையில் வாழ்ந்த பௌத்த சிங்கள மக்களின் சனத்தொகையை  விடவும் ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகமாகும். புள்ளிவிபரங்களின் பிரகாரம் 1963ஆம் ஆண்டு 61,996 ஆகக் காணப்பட்ட சிங்கள மக்களின் சனத்தொகையானது 1981ஆம் ஆண்டு 146,943 ஆகவும் 2001ஆம் ஆண்டில் 236,583ஆகவும் அதிகரித்தது அல்லது அதிகரிக்கப்பட்டது. 1963ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையானது 97,621ஆகவும் தமிழர்களின் எண்ணிக்கை 50,497ஆகவும் காணப்பட்டது. 1981ல் முஸ்லிம்கள் 161,568ஆகவும் 2001ல் 264,620ஆகவும் காணப்பட்டனர். தமிழர்களின் எண்ணிக்கை 1981ல் 79,257ஆகவும், 2001ல் 109,903ஆகும் காணப்பட்டது.

2012ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின் பிரகாரம், 4,415 சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும், 20 பிரதேச செயலகப் பிரிவுகளையும், 503 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் 648,057  பேர் வாழ்கின்றனர். இத்தொகையில் சிங்களவர் 251,018 பேரும், 282,484 முஸ்லிம்களும், 112,750 தமிழர்களும் அடங்குவர் என்பதோடு மக்கள் தொகையில் முஸ்லிம்கள் அதிகப்படியாக இம்மாவட்டத்தில் வாழ்வதானது அல்லது அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் அதிகரித்து முஸ்லிம்  மக்களின் சனத்தொகையானது  முக்கியமாக திருகோணமலை மாவட்டத்தில் 1981இன்  கணக்கெடுப்பின் போது 75,000 இருந்த சனத்தொகை 2007 யில் 151,000 ஆகக்  கூடியுள்ளது.  தமிழர் சனத்தொகையில்    6%வீழ்ச்சி  முஸ்லிம் சனத்தொகையில்  5%வளர்ச்சி திருமலை மாவட்டத்தில்  முஸ்லிம்களின்   சனத்தொகையில்  பெரும் வளர்ச்சி –  தற்போதைய சனத்தொகையில்  50%காணப்பட்டமை சுட்டிக் காட்டப் படத்தக்கது. திட்டமிட்ட இனக் குறைப்பு, நில ஆக்கிரமிப்பும், குடியேற்றமுமே இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணமாகும்.

data சிங்கள ஆக்கிரமிப்பின் - சத்தமில்லா இனக்குறைப்பு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் இன்னொரு வடிவமே – நிலவன்வட கிழக்கு பிரிக்கப்பட்டால் சிங்கள ஆதிக்கம் பெருகும். வடகிழக்கு இணைக்கப்படாவிட்டால் கிழக்கு மாகாணம் தமிழர்கள் கையில் இருந்து பறிபோய்விடும். 1881-ம் ஆண்டில் தமிழர்கள் 60 சதவிகிதமும் முஸ்லீம்கள் 35 சதவிகிதமும் சிங்களவர்கள் 5 சதவிகிதமும் கிழக்கில் இருந்தார்கள். 1946ல் முஸ்லீம் மக்கள் 35ல் இருந்து 39 சதவிகிதத்துக்குப் பெருகினார்கள்.

தமிழர்கள் 60 சதவிகிதத்தில் இருந்து 54 சதவிகிதத்துக்குக் குறைந்தார்கள். சிங்களவர்களில் மாற்றம் இருக்கவில்லை. 5 சதவிகிதமாகவே இருந்தார்கள். 1946 தொடக்கம் சிங்கள மக்களின் தொகை மிக விரைவாகப் பெருகத் தொடங்கியது. 1981ல் தமிழர்களின் சனத்தொகை 42 சதவீதமாகக் குறைந்தது. முஸ்லீம்களின் சனத்தொகை 32 சதவீதமாகக் குறைந்தது. சிங்களவரின் சனத்தொகை 5 சதவிகிதத்தில் இருந்து 25 சத விகிதத்திற்குப் பெருகியது. தமிழரின் சனத் தொகை வருடா வருடம் குறைந்து கொண்டு போகிறது. ஆகவே வடகிழக்கு இணைப்பு தமிழர்களுக்கு மிக அவசியம் ஆகின்றது. இல்லையேல் மொழி, நிலம், அடையாளங்கள், பாரம்பரியங்கள் எல்லாமே அழித்து வட கிழக்கில் சிங்கள ஏகாதிபத்தியம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு இடம்பெறும் திட்டமிட்டதமிழின  இனக்குறைப்பு அதிவேகமாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இலங்கையின் இனமுரண்பாட்டு வரலாற்றில் போராட்டம் 1916ம் ஆண்டிலிருந்து 1948 வரையும், 1948 தொடக்கம் 1954ம் ஆண்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி இனப்பிரச்சனையை அரசியலாக 1955 களில் துளிர்விட்டது. ‘சிங்களம் மட்டும்’ முழக்கத்துடன் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி பதவியேற்றார். இதன் பின்னர் இலங்கை தேசியம் என்ற கோட்பாடு சிதைவடைந்து இனப்பிரச்சனை படிப்படியாக விஸ்வரூபமெடுத்து  1958, 1972, 1983தொடக்கம் 2009 வரைமட்டுமல்ல, 2009 தொடக்கம் இன்று வரை இன அழிப்பு, இனக் குறைப்பு,  அழிவுகள் பிரச்சனைகள், ஏமாற்றங்கள் தொடர்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்தி இலங்கை அரசாங்கம் தமிழ் இனத்திற்கு எதிரான யுத்தத்தை இன்னமும் நிறுத்தவில்லை.

2009 வட கிழக்கு பகுதியில் இடம்பெற்ற நேரடி தமிழ் இன அழிப்பு சம்பவங்கள்இன்று சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறி சர்வதேச அரசியல் , மற்றும் மனித உரிமை அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இலங்கைத் தீவில் மிகக் கொடூரமான பாதுகாப்பு வலயத்திற்குள் சற்றேறக் குறைய 3 இலட்சத்திற்கும் அதிகமான  தமிழர்களின் வாழ்வை ஒட்டு மொத்தமாக முடித்துவிட ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற ஒரே சொற்றொடரை ‘அர்த்தமுள்ளதாக்கி’  அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு ஆதரவளித்து, அதன் மூலம் தமிழர்களின் நியாயமான, மனிதாபிமான உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கு உலக நாடுகளின் பங்களிப்பும் மௌனமாக தமிழ் இனப்படுகொலையைத் திட்டமிட்டு ஈவு இரக்கமின்றி நடத்திய குழந்தைகள் முதல் வயோதிபர்கள் வரை ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர். இடப்பெயர்வும் பொருளாதாரத் தடையும் பெண்களை கர்ப்பவதிகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட இனப்படுகொலையும் ஒருவகை இன அழிப்பும் இனக் குறைப்பும் ஆகும்

ஹிட்லரின் நாஜிகள் இரண்டாம் உலகப்போரின் போது நடத்திய படுகொலைகளுக்குப் பிறகு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அரசு நடத்திய இனப் படுகொலையில் கர்ப்பிணித் தாய்மார்களும் கொல்லப்பட்டனர். எண்ணற்ற தமிழ்ப் பெண்கள் பாலியல் ரீதியாக சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டனர் ஏராளமான இளைஞர்கள் யுவதிகள்  சித்திரவதை செய்து அழிக்கப்பட்டனர். சிலர் சிறைகளில் வார்த்தைகளினால் சொல்லமுடியாத கொடுமைகளை அனுபவித்துள்ளார்கள்.

20,000 அதிகமான ஆண்கள் தற்போது அவர்கள் குடும்பத்துடன் இல்லை. (இந்த ஆண்கள் காணாமல் ஆக்கப்பட்டும் , கடத்தப்பட்டும் , அரசியல் கைதிகளாக சிறைகளில் இருக்கின்றார்கள்) இதனால் பெண் தலைமைத்துவக்  குடும்பங்கள் அதிக வாழ்வாதாரப் பின்னடைவைச் சந்தித்து வருகின்றார்கள். 25 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் கணவனை இழந்தவர்களாகவும் உள்ளனர். கணவன் கொடூரமான  முறையில் படுகொலை செய்யப்பட்டதை எண்ணி இவர்கள் அந்தத் துயரத்தினை மறக்க முடியாது தொடர்ந்தும் அத்துயரத்துடனேயே வாழ்கின்றனர். ஆண்களை தடுத்து சிறைப்படுத்தி வைத்திருப்பதும் ஒருவகை இனக்குறைப்பாகும் .

இனப்படுகொலையிலிருந்து தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா.மன்றம் தவறி விட்டது. இப் படுகொலைகள் கொன்றொழித்தும், அங்கவீனர்களாக்கியும், மனநோயாளிகளாக்கியும், அனாதைகளாக்கியும் குறிப்பாக 90,000 பேர் போர்க்கால விதவைகள்.

bansri1congrats சிங்கள ஆக்கிரமிப்பின் - சத்தமில்லா இனக்குறைப்பு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் இன்னொரு வடிவமே – நிலவன்பெண்கள் காணாமல் போன தங்கள் கணவன், தந்தை, பிள்ளைகள் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்காமல் துயரத்தில் வாடுகின்றார்கள். தமிழர் தாயகத்தில், குறிப்பாக வடக்கு மாகாணத்தில் குவிக்கப்பட்டு இருக்கின்ற இராணுவம் ஐந்து தமிழர்களுக்கு ஒரு சிங்கள இராணுவச் சிப்பாய் என்கிற வீதத்தில் தமிழர் தாயகமே சிங்கள இராணுவ முகாம்களாக ஆக்கப்பட்டுவிட்டது. தமிழ் இனத்தையே கருவறுத்துப் பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்ற வன்மத்துடன் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார்கள். ஆனாலும் தமிழ்ப் பேசும் மக்களின் செறிவைச் சீர்குலைப்பதற்கான பேரினவாத நோக்கமே அடிப்படையாக தமிழினக்குறைப்பு செயல்த்திட்டங்களை தொடர்ந்து ஆடம்பரம் இல்லாமல் தமிழ் அரசியல்த் தலைவர்களின் பேராதரவுடன் நிகழ்த்தி வருகிறது.

தமிழ் மக்களின் உரிமைக்கு எதிராகவும் அபிலாசைகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு இனத்தை அழிப்பதற்கு அவர்களின் வாழ்வாதாரங்களை அழிக்க முடியும். அவர்களின் தொழில், வாழ்விடம், , கலை, கல்வி, பண்பாடு தமிழ் மொழி மற்றும் நில அபகரிப்பு என்பது உலக சரித்திரத்தில் ஓர் இனம் எவ்வாறு அழிக்கப்பட்டதோ அவ்வாறு நடை பெறுகின்றது. அனைத்தையும் அழித்தாலே அந்த இனம் அழிந்துவிடும். இனப்படுகொலைக்கு எதிரான இரண்டாவது பிரிவின்படி, ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத அளவுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதும் ஒருவகையான இனப்படுகொலை ஆகும்.

இலங்கைக்கு 95 சத வீதமான மருந்து வகைகள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ; போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதும் , இவற்றின் தரம் பற்றி பல கேள்விகள் உள்ளதாகவும் அறிய முடிகிறது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இலங்கையில் சுமார் 22 நிறுவனங்கள் மருந்து தயாரிப்பில் ஈடுபடுவதும், இலங்கையில் தடைசெய்யப்பட்ட கருத்தடை மாத்திரைகள் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பல சாதாரண மருந்தகங்களில் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் தாயாரிக்கப்படும் குறித்த மாத்திரை யாழில் சில மருந்தகங்களில் மூவாயிரம் ரூபாய் தொடக்கம் நான்காயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.  குறித்த மாத்திரையினால் 5 மாதங்கள் வளர்ந்த சிசுவைக் கூட அழிக்க முடியும். இதனால் தாய்க்கு அதிக இரத்த போக்கு ஏற்பட்டு மரணம் நிகழும் வாய்ப்புக்கள் கூட உள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் 2013ம் தெரிவித்தார். ஆனால் அது இன்றும் தொடர்வது கவலைதரும் விடயமாகும்.

இலங்கையில் வருடாந்தம் சராசரி 6,000 பிறப்புக் குறைபாடுடைய பிரசவங்கள் இடம் பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார வாரியத் தகவல்களின்படி அறியமுடிகிறது. இவற்றில் 68 சதவீதமான குழந்தைகள் ஒரு வாரத்திற்குள் இறக்கின்றன. 500 – 600 வரையிலான குழந்தைகள் ஒரு வருடத்திற்குள் இறக்கின்றன. 1,700 குழந்தைகள் தாயின் கருவிலே உயிரிழக்கின்றன என்றும் அந்த தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

சட்டவிரோதக் கருக்கலைப்பு நிலையங்களும் மன்னார் , வவுனியா, யாழில் இயங்குகின்றன. அங்கு சென்றால் 30 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். குறைந்த விலையில் இந்த மாத்திரைகள் விற்கப்படுவதால் பலரும் இந்த மாத்திரைகளை பாவிக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சராசரியாக மாதம் ஒன்றுக்கு 5 முதல் 10 பேர் வரையில் சிகிச்சைக்காக வருகின்றனர். யாழில் 60வீதமான மருந்தகங்கள் பதிவு செய்யப்படவில்லை எனவும் யாழ். நகரில் உள்ள 34 மருந்தகங்களில் 16 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார வைத்தியப் பிரிவு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வட கிழக்கில் அதிகமான மருந்தகங்கள் பதிவுசெய்யப்படாத  நிலையில்  காணப்படுகிறது. தமது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி  பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மாகாண சபை வடமாகாண  அரசியல் பிரதிநிதிகளின் செல்வாக்கும் இவற்றிக்குக் காரணமாகும்.   அவற்றிலும்   அதிகமாக வைத்தியர்கள் தமது பெயர்களில் வைத்திருக்கும்  தனியார் மருத்துவமனைகள் தனியார் சிகிச்கை நிலையங்கள் ஆகும் இவற்றில் சில மருத்துவர்கள் அரசின் தமிழ் இனக்குறைப்பிற்கு தங்கள் பணிகளை செவ்வனச் செய்துவருகின்றார்கள். அரசின் கைக்கூலி மருத்துவர்கள் சிலரும் அரச மருத்துவ மனைகளில்  தமது கைவரிசையினைத் தொடர்ந்து காட்டி வருகின்றார்கள்.

கருக்கலைப்பு எனப்படுவது தாயினுடைய கருவறையில் இருந்து கருவை நீக்குவதாகும் என்பதே அதற்கான மொழியியல் ரீதியான கருத்தாகும். பிரசவ காலம்நிறை வடைவதற்கு முன்னர் கருப்பையிலிருந்து கருவை வெளியேற்றுவதே கருக்கலைப்பு. வைத்திய விஞ்ஞானத்தின்படி கருவில் தீவிரக் குறைபாடு (serious foetal impairments)இருந்தால் 15 முதல் 20 வாரங்களில் இனம் காண முடியும். சிறப்பு மருத்துவர்களின் கூற்றுப்படி, அநேகமான குழந்தைகள் உயிருடன் பிறப்பது இல்லை. அதனை அறிந்தும் கர்ப்ப காலத்தைத் தொடர வேண்டிய நிலை அந்தப் பெண்களுக்கு ஏற்படுவதாக மருத்துவத் துறையினரால் சுட்டிக் காட்டப்படுகிறது. இத்தனைக்கும் இலங்கையில் கருக்கலைப்பு சட்டவிரோதமான செயற்பாடாக உள்ளது.இலங்கையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் கருவினால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதப்பட்டால் அந்த சந்தர்ப்பத்தில் மாத்திரம் தான் கருக்கலைப்புக்கு அனுமதி கிடைக்கின்றது

இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவையின் படி, வலிந்து கருக்கலைப்புச் செய்கின்ற ஒருவருக்கு 03 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம்,  அல்லது இரண்டினையும் சேர்த்து விதிக்க முடியும். தற்போது மருத்துவ நிபுணர்கள் குழுவொன்றினால் பாலியல் துஷ்பிரயோகம், இள வயது கர்ப்பம் (பாலியல் துஷ்பிரயோகம்), கருவில் தீவிர குறைபாடு போன்ற காரணங்களின் நிமித்தம் கருக்கலைப்புக்கு அனுமதியளிப்பது தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு ஏற்கனவே கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. நிலையில் அதற்கு எழுந்த  எதிர்ப்புகள் காரணமாக அந்தப் பரிந்துரைகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் எழுத்துக்களில் மட்டுமே உள்ள நிலையில் நடைமுறையில் செயற்பாடுகள் வேறாகவே உள்ளது.

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தமிழ்ப் பெண்களுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்டது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தால் கடந்த 2017 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட அறிக்கையை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. அரச படைகளின் ஆக்கிரமிப்பிற்குள்  வாழும் மக்கள். தமிழர் தாயகத்தில்  உள்ள பெண்களின் பாதுகாப்பு நிலை கேள்விக்குறியாக உள்ளதென அனைத்துலக நெருக்கடிகளுக்கான ஆய்வுக்குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.  இலங்கையின் வடக்கு கிழக்கு பெண்களின் பாதுக்காப்பினை 49 பக்க ஆய்வறிக்கையொன்றினை International Crisis Group  நெருக்கடிக்களுக்கான ஆய்வுக்குழு (20-12-2011) அன்று வெளியிட்டமையும் குறிப்பிடத் தக்கது வடக்கு மாகாணத்தில்  செயல்பட்டுவரும் மனித உரிமை அமைப்புகளிடமிருந்து வெளியாகியுள்ள அறிக்கைகளில் தமிழ்ப் பெண்களை மிரட்டிக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது குறித்து ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

2013ம் ஆண்டு மாதம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள உமையாள்புரம்,  மலையாள்புரம் ஆகிய இருகிராமத்தைச்  சேர்ந்த 50 பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. போசாக்கு தொடர்பான கிளினிக் என அழைக்கப்பட்டு அப் பெண்களுக்கு வேரவில் ஆரம்ப வைத்தியசாலையில்வைத்து கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்ட பெண்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் இல்லாமலும் அவர்களின் சம்மதமும் இல்லாமலையே அவர்களுக்கு அன்றைய தினம் கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு வடக்கு உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்களை, அவர்களின் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக கிளிநொச்சி பகுதியில் உள்ள வேராவில் அரசு மருத்துவமனைக்கு வரும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி அவர்கள் அங்கு சென்ற போது, அவர்களை மோசடி செய்து நீண்டகாலம் குழந்தை பிறக்காமல் இருப்பதற்கான ஊசியை அவர்களின் கைகளில் செலுத்தியுள்ளனர். கருத்தடை செய்துக் கொள்ளாவிட்டால் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும் என அப்பெண்கள் மிரட்டப் பட்டிருக்கின்றார்கள். இந்தக் கட்டாயக் கருத்தடைகளை  இலங்கை அரசுடன் இணைக்கப்பட்டுள்ள துணை ராணுவக்குழு, அரசின் கைக்கூலி மருத்துவர்களும் தொடர்ந்து  ஈடுபட்டு வருகின்றார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டாய கருத்தடைக்கு உட்படுத்தபட்ட பெண்களிடம் இருந்து தற்போது தாம்விரும்பியே கருத்தடை செய்து கொண்டதாக சம்மத கடிதங்கள் வாங்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருந்தார்கள்.  கருத்தடை சிகிச்சை செய்யப்படும் போது குறித்த பெண்ணினதும் அவரது கணவனதும் சம்மதம் எழுத்து மூலம்பெறப்பட வேண்டும். ஆனால் அன்றைய தினம் இவை எதுவும் இல்லாமலையே அப் பெண்களுக்கு கருத்தடைசிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சட்டவிரோத கருத்தடைக்கு உட்படுத்தப்பட்ட சதீஸ்குமார் மஞ்சுளா என்ற பெண் 2013ம் கார்த்திகை மாதம் 30 ம்திகதி உயிரிழந்தார். அதன் பின்னர்அவருடைய கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில், அவர் நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக ஒருகதையை உருவாக்கப்பட்ட உண்மை வெளியில் சொன்னால் தங்கள் உயிர்களுக்கம் ஆபத்து நேரிடும் என்ற அச்சத்தில் பல உண்மைகள் மௌனித்து கிடக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டாயக் கருத்தடை நல்லாட்சி அரசாங்கத்தின் கீழும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண சபையின் சுகாதாரஅமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். சட்டவிரோதக் கருத்தடை 2013ம் ஆண்டு நடைபெற்றதுடன், அது மத்திய அரசாங்கத்தினால் தொண்டு நிறுவனம் ஒன்றின் ஊடாகமேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அநீதி இழைக்கப்பட்டமை உன்மை என்று ஏற்றுக்கொண்ட நிலையில் கிளிநொச்சி – வலைப்பாடுபகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத கருத்தடை தொடர்பாக தாங்கள் சாட்சிகளை பெற சென்றிருந்தபோது, அங்கே கடற்படையினர் தம்மை அச்சுறுத்தியதாகக் 2016ம் ஆண்டு வடமாகாண சபையின் 65ம் அமர்வு வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்தடை செய்து கொண்டதாகக் கருத்தடைக்கு உட்படுத்தப்பட்ட பெண்களிடம் இருந்து இராணுவ அச்சுறுத்தல்களின் பின்னர்  தாம் விரும்பியே கருத்தடை செய்து கொண்டதாகக்  குடும்ப நல சுகாதார உத்தியோகஸ்தர்களால் சம்மதக் கடிதங்கள்வாங்கப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தார்கள். தொடர்ந்து இவ்வாறான கருத்தடைக்கு உட்படுத்தப்படுவதும்; சம்மதக் கடிதம் வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருவதாகவும் தெரியவருகிறது. மக்களின் உரிமையை பாதுகாப்பும் பொறுப்போடு மக்கள் பிரதிநிதிகளாக உள்ள தமிழ் அரசியல் பிரதிநிகளாக பிரதேச சபைக்கும்  மாகாண சபைக்கும்  பாராளுமன்றத்திற்கும் மக்கள் ஏன் தங்களை வாக்களித்த அனுப்பி வைத்தார்கள் என்பதை மறந்து அரசுடன் கூட்டாகி  தம் தேசிய இனத்து மக்களை இனக்குறைப்பு செய்வதில் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதியான வரலாற்றை நடைமுறைப் படுத்துபவர்களுக்கு உரிய வகையில் தேர்தல்களில் அவர்களை புறக்கணிக்க  வேண்டும். எமது நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலை (Genocide) போர்க்குற்றம் என தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறலை தடுத்து நிறுத்துவோம். அதற்கு நமது ஒவ்வொருவரின் குரலும் உலகெங்கும் ஒலிக்க வேண்டும்.

இலங்கையில் தற்போது காணப்படும் இனப்பிரச்சினைக்கு சாதி ரீதியான பிரச்சினைகளோ, மத ரீதியான பிரச்சினைகளோ காரணம் அல்ல. 2016 பெப்ரவரி மாதம் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கலப்புத் திருமணங்கள் மூலம், அமைதியை ஏற்படுத்தலாம் சாதி ரீதியான கலப்பு, மத ரீதியான கலப்பு, இன ரீதியான கலப்பு இந்த மூன்றையும் வலியுறுத்தித் தான் அவர் கருத்து வெளியிட்டிருந்தார். ஆளுநர் முன்மொழியும் இனக்கலப்பு என்பது இன்னொரு வகையான இனச்சுத்திகரிப்பு.  இது, அமைதியின் பெயரால் முன்மொழியப்பட்டுள்ள இனச் சுத்திகரிப்பு. இனரீதியான கலப்புத் திருமணங்கள் கூட இயல்பானதாக, திட்டமிட்டதாக அல்லாமல் நடக்கும் போது, அதனை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.ஆனால். இனக்கலப்பு ஏற்பட வேண்டும் என்று, திட்டமிட்டு செயற்படுத்துவதை இனச்சுத்திகரிப்பாகவே கருத முடிகிறது.

2018ம் ஆண்டு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த அரச ஊழியர் ஒருவரின்  மனைவி  வயது 25. இவர் , தனது  முதல்  பிரசவத்திற்கு வவுனியா கற்குழியில்  உள்ள  பெற்றோர் வீட்டிற்கு அருகில் உள்ள பிரபல  தனியார்   மருத்துவமனையில் அவருக்கு, இயற்கைப் பிறப்புக்கு தயாராக இருந்த நிலையிலும் வைத்தியசாலையின் கட்டாயப்படுத்தலில் அறுவைச் சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்களுக்குப் பின், வயிறு வலி ஏற்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனையில், பரிசோதித்த போது, கர்ப்பபை சிதைவடைந்திருப்பது தெரியவந்ததுடன் எதிர்வரும் காலத்தில் குழந்தை பெற்றுப் கொள்வது   கடினமானதாக இருக்கும் என வைத்தியர்கள் தெரிவித்தபோது தலையில் இடிவிழுந்தது. தமக்கு குழந்தை பிறந்த தனியார் வைத்தியசாலையில் என்ன நடந்தது என கேட்பதற்கு சென்றபோது வைத்தியசாலையின் உரிமையாளர் வைத்தியர் தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி உயிர் அச்சுறுத்தல் விடுத்ததுடன் இலங்கை இராணுவப்புலனாய்வு பிரிவிடம் கணவர் விடுதலைப் புலி எனக்கூறி பல விசாரனைகளுக்கு உட்படுத்தியதாகவும் நடந்தவற்றை வெளியில் சென்னால் அல்லது முறைப்பாடு செய்தால் பிள்ளை அப்பா  எனக் கூப்பிட கணவர் உயிருடன் இருக்கமாட்டர் என அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருந்தார்.

2019ம் ஆண்டு மே மாதகாலப்பப் பகுதியில் திருகோணமலையில் உள்ள கருணாகல் பயிற்சி மருத்துவமனையில், சிசேரியன் முறையில் குழந்தைகளை பெற்ற 4 ஆயிரம் இந்து மற்றும் புத்த மத பெண்களை கட்டாயப்படுத்தி கருத்தடை ஆபரேஷன் செய்ததாக டாக்டர் சியாபுதீன் முஹம்மது சபி என்பவர் மீது புகார் எழுந்தது. குறிப்பாக, அரபு நாட்டு செல்வந்தர்களின் கைக்கூலியாக செயல்பட்டு, இந்து மற்றும் புத்த மத பெண்களுக்கு அடுத்த குழந்தை பிறக்காமல் தடுப்பதற்காக, இதுபோல, சிசேரியன் பிரசவ மயக்க நிலையில் இருக்கும்போது கருத்தடை ஆபரேஷன் செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி  3 நாட்களில் சுமார் 150 பெண்கள், சியாபுதீன் மீது புகார் அளித்துள்ளதால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணை குழுவை அமைத்து இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னே உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது

தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவில் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்ற ஒரு விடயமாக உள்ளது. நாம் இருவர் நமக்கு இருவர் என்ற வகையில் குடும்பங்கள் அமைவது தமிழ் சமூகத்திடம் காணக்கூடியதாகவுள்ளது. இளவயது மற்றும் பிந்திய வயதுகளில் கர்ப்பம் தரிப்பவர்களில் கணிசமானோர் கருக்கலைப்பில் ஈடுபடுகின்றனர். இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 1000 கருக் கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்ப நலப் பிரிவு கடந்த வருடம் தெரிவித்திருந்தது. அந்தக் கருக்கலைப்புக்களை நியாயப்படுத்துவதற்காக வறுமை, பராமரிக்க முடியாமை, இப்போதைக்குத் தேவையில்லை, எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டது என்று அவர்கள் கூறும் எந்தக் காரணத்தாலும் கருக்கலைப்பை நியாயப்படுத்திவிட முடியாது. ஆனால் அதே வேளை சகோதர சமூகம் சராசரியாக நான்கு குழந்தைகளை பெறுகின்ற தன்மையில் தற்போதும் உள்ளனர். இலங்கையின் சனத்தொகையும் சடுதியாக அதிகரிப்பதால் குடும்பக் கட்டுப்பாடு குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகக் குடும்பத் திட்டமிடல் பணியகத்தின் பணிப்பாளர் சிறப்பு நிபுணர் கீதாஞ்சலி மாபிற்றிகம 2018 குறிப்பிட்டார்.

ஈழத்து தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதில் பெண்களின் பங்கு அதிகமென்றே சொல்ல முடியும். பாரம்பரிய தமிழ் பண்பாட்டில் போர்முறைகளுக்குப் புதிய புரட்சியாக வீட்டுக்குள் அடக்கப்பட்டு அடைபட்டிருந்த பெண்கள்  ஆயுதபாணிகளாக அலங்கரித்து பெருமைப்பட்டது உலகில் இருக்கின்ற தமிழ் சமூகம் நாங்கள் ஒரு புதிய புரட்சிகரமான மக்கள் விடுதலைக்கு பெண்களின் பங்கு  தமிழ் சமூகத்தில் நிலவிவந்தது. பெண்விடுலை சமத்துவம் என பல பரிமாணங்களைக் கொண்டு காணப்பட்ட போராளிப் பெண்கள் தற்போது  எதிர் கொள்ளும் பிரச்சனைகளை வெளியில் சொல்ல முடியாமல் வாழ்கின்றார்கள்.போர்களின் போது, ஆண்கள் கொல்லப்பட்டதும், படுகொலை செய்யப்பட்டதும், பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதும் இனத் தூய்மையைக் கெடுப்பதும், ஒரு திட்டமிட்ட செயற்பாடுகளாகவே மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. தமிழர்களுக்கான இனஅடையாளங்கள், தொலைக்கப்பட்டு விட்டால், அவர்கள் தமக்கான உரிமைகளைக் கோரும் பலத்தை இழந்து போவார்கள் என பௌத்த சிங்களத் தலைமைகள்  சிந்திக்கிறார்கள்.

வரலாற்றுரீதியாகவும், பண்பாட்டுரீதியாகவும், இனப்படுகொலை , இனக்குறைப்பு, இனச்சுத்திகரிப்பு.   மேற்கொள்ளப்பட்டுவரும் விடயம்.  1990ஆம் ஆண்டிலிருந்து மலையகத் தமிழ்ப் பெண்கள் கட்டாயமாக கருத்தடை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதும் போருக்குப் பின்னரான இக் காலப்பகுதியில், போரினால் உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ள மக்கள் மத்தியில் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை ஊக்குவிப்பதற்கான தேவைகள் இல்லாத போதிலும்  தமிழ்ப் பெண்கள் கட்டாய கருத்தடைக்கும், கருச்சிதைவுக்கும் உட்படுத்தப்படுவதும் தமிழர்களை குறிவைத்து இனக்கட்டுப்பாடடு செய்யுமாறு அரச அரசசார்பற்ற நிறுவனங்களினூடாக குடும்பத் திட்டமிடல் எனக்கூறி வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் சாதாரன மக்களிடத்தில் சட்டவிரோத கருத்தடைகள் நடைபெற்று வந்த  நிலையில் அவ்வாறான சட்டவிரோதக் கருத்தடைகள் இப்போதும் இடம்பெறுவதாகவும், அதிக கருத்தடை செய்த வைத்தியர்களுக்கும் பரிசு கூட வழங்கப்படுவதும் தெரியவருகிறது

மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர குடும்ப கட்டுப்பாடு கடந்த 50 ஆண்டுகளாக குடும்பநலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், பிறப்பு விகிதம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. பெண்ணுறை கருத்தடை ஊசி , கருத்தடைக் குளிகைகள், , நூல்கொண்ட கருப்பையுள்ளான சாதனம், கருத்தடை வளையம் , கருப்பையுள்ளான சாதனம் (Intrauterine Device (IUD) ,அவசரக் கால கருத்தடை மாத்திரைகள் , கருத்தடை ஒட்டு,நிரந்தரக் கருத்தடை முறைகள்,  பெண்களுக்கான நிரந்தரக் கருத்தடை, ஆண்களுக்கான நிரந்தரக் கருத்தடை , எனப் பல குடும்பக் கட்டுப்பாடுகளும் கருக்கலைப்புகளையும் அரசு திட்டமிட்டு தமிழர் தாயகப் பகுதிகளில் நிகழ்த்தி வருகிறது.

கருக்கலைப்பிற்கு  பின்  கருக்கலைப்புகளுக்கு உட்பட்ட பெண்கள் கர்ப்பமாக நினைக்கும் போது சில சிக்கல்களை அந்த கருக்கலைப்புகளின் அதிகப்படியான எண்ணிக்கையானது ஏற்படுத்தும். தொடர்ச்சியான கருக்கலைப்புகள் தொற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கி திட்டமிடும் கர்ப்பத்தைத் தடுக்கிறது. சில சந்தர்ப்பங்களில், பல கருக்கலைப்புகளால் ஏற்படும் தொற்று கருமுட்டைக்(fallopian tube) குழாயை அடைத்து விடும். இந்த அடைப்பானது கரு முட்டையோடு விந்துக்கள் சேர்வதை தடுக்கிறது கருத்தடை முறைகள்  பற்றி நன்கு புரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும். இதற்கான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் போதுமானதான இல்லை கருத்தடை முறையைத் தீர்மானிப்பதில் ஆண், பெண் இருவர் தவிர மருத்துவரின் ஆலோசனையும் முக்கியம் ஆனால்  இனக்குறைப்பை அரசின் நிகழ்ச்சி நிரலின் கீழ் நின்று செயற்படுபவர்களில்  சில வைத்திய அரசியல் வாதிகள் முதல் பெறுப்புக்களில் இருக்கும் வைத்தியர்கள் மற்றும் நாளாந்தம் மக்கள் நம்புகிற  வைத்தியர்கள்வரை இதில் ஈடுபடுகின்றார்கள் என்பது கவலைதரும் விடயம் ஆகும்.

தமிழ் மக்களின் சனத்தொகை 1963 இல் 45 % இல் இருந்து 2018 இல் 38 % ஆக மாறியதோடு அதிகூடிய சனத்தொகையாக இருந்த தமிழ் மக்கள் தற்போது இரண்டாவது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . தற்போதைய சனத்தொகை வளர்ச்சி விகிதத்தை வைத்து பார்க்கும் போது தமிழ் மக்களின் சனத்தொகை வளர்ச்சி வீதம் வருடத்திற்கு 1.5 % மும், முஸ்லிம் மக்களின் சனத்தொகை வளர்ச்சி விகிதம் வருடத்திற்கு 2 % மும் ஆகவுள்ளது . இந் நிலை தொடருமாயின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தமிழ் மக்களின் சனத்தொகை 35 % ஆக மாறக்கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றது

ஒவ்வொரு கருக்கலைப்பின்போதும், ஒரு மனித உயிர் கொல்லப்படுகிறது. கருக்கலைப்பு என்பது மனிதப்படுகொலைக்கு ஒப்பான செயலாகும். ஆனால், கணிசமானோர் எந்தவொரு உறுத்தலும் இன்றியே அதைச் செய்து விடுகின்றனர். இலங்கையில் நிகழும் கருத்தரிப்புக்களில் 77 சதவீதமானவை எதிர்பாராத கருத்தரிப்புக்கள் என்று சுகாதார அமைச்சின் குடும்ப நலப் பிரிவு கூறுகிறது இதன் உண்மை என்ன?. சட்டவிரோதமான கருக்கலைப்பு செய்வதே இங்குள்ள உறுத்தும் உண்மையாகும். உண்மையும் நீதியும் இல்லாத இடத்தில் நல்லிணக்கம் இருக்கப்போவதில்லை. கிட்லர் மேற்கொண்டதைப்போல துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அழிப்பது மாத்திரம் இன அழிப்பல்ல. பல்வேறு நுட்பமான நடவடிக்கைகள் மூலமும் ஓர் இனத்தை அழிக்கலாம். கட்டாயக் கருத்தடையும், கருக்கலைப்பும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனித நேயச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும். நலிவடைந்த மக்களுக்குத் தேவைப்படும் அடிப்படை சுகாதார சேவைகளை, கட்டாயக் கருத்தடைக்காகப் பயன்படுத்திய இலங்கை அரசின் செயல் மூர்க்கத்தனமானது தார்மீக ரீதியில் கண்டிக்கத் தக்கது

sampuro209 சிங்கள ஆக்கிரமிப்பின் - சத்தமில்லா இனக்குறைப்பு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் இன்னொரு வடிவமே – நிலவன்இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில்  பொருளாதாரமானது வளர்ச்சிப் பாதையில் பெண்கள் திறன் தொழிற் துறை கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளைப், சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடவும் தொழிற் துறை திறன்கள் மற்றும் வியாபார முகாமைத்துவத் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம், பெண்கள் அவர்களது வாழ்வாதாரத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கும், வருமான மார்க்கங்களை அதிகரிப்பதன் மூலம் தமது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கும்  அரசு ஆதரவளிக்காமையால் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை செய்ய ஆண்டுதோறும் நாட்டை விட்டு வெளியேறும் 1,00,000க்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்தவர்கள் என மத்திய வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன இதில் அதிகமானவர்கள் தமிழ் பெண்கள். சவூதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், ஓமான் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்கின்றார்கள். இது இனப்பரம்பலைக் குறைப்பதற்கு அரசு கையாளும் வழிமுறை என்றால் மிகையாகாது.

உலக வரலாற்றில், இனத் தூய்மையைக் கெடுப்பதற்கு இதுபோன்ற பல வழிகள் கையாளப்பட்டிருக்கின்றன. சீனாவில் ஜப்பானியர்கள் இதனைச் செய்தனர். யூகோஸ்லாவிய போரிலும் இத்தகைய வழிமுறை கையாளப்பட்டது. ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் இத்தகைய வழிமுறை காட்டுமிராண்டித்தனமாக பயன்படுத்தப்பட்டது. திட்டமிட்டு, ஓர் இனத்தின் அடையாளம் தனித்துவம், என்பனவற்றைச் சிதைத்து, அதனை இல்லாமல் செய்வதே இதன் நோக்கம். போரின் பெயரால் நிகழ்த்தப்பட்ட இனச்சுத்திகரிப்பு. தமிழர்கள் தமது இனத்தின் அடையாளத்தையும், தனித்துவத்தையும், தூய்மையையும் கட்டிக்காக்கக் கூடாது என்று கூறும் உரிமை வேறெந்த இனத்தவருக்கும் கிடையாது.

வடக்கில் தமிழ்ப் பெண்களை இலங்கை இராணுவத்துக்கு இணைத்துக் கொள்ளுதலும்,  கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ்ப் பெண்கள் இராணுவத்தினரை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுவதும்,  இராணுவத்தினர் தமிழ் பெண்களை பாலியல் வன்புணர்விற்கு உட் படுத்துவதும் ,  உடல்ரீதியான, மன ரீதியான கொடுமைகள் குறித்த தகவல்கள் வெளியாவது பொதுவாக இருந்த போதிலும், அவமானம், அவப்பெயர் ஆகியவற்றுக்கு பயந்து கொண்டு தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் ரீதியான கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவை குறித்துப் பேசுவதற்கு பாதிக்கப்பட்ட பெண்கள் தயங்குகின்ற நிலை காணப்படுகிறது .

பெண்கள் உளவியல் ரீதியாகவும். சமூக ரீதியில் பாதிக்கப்படக்கூடிய குழுவாகவும் காணப்படுகின்றனர். கடுமையான உணர்ச்சி வலியை அனுபவித்த பெரும்பாலான பெண்களில் இன்னும் பலர் முழுமையாக பாதிப்புக்களின் தாக்கத்திலிருந்து மீளமுடியாத நிலையில் ஆபத்தில் இருக்கின்றனர் பெண்களை வலுப்படுத்தலுடனான உளச்சமூகப் பணி என்பது முக்கியமானதாக அமைகின்றது. அவர்கள் முகங்கொடுக்கும் ஆற்றலை வளர்ப்பதற்கான கல்வி, தொழிற்கல்வி போன்றவற்றினூடான நலச்சேவை மற்றும் புனர்வாழ்வு என்பது வழங்கப்பட வேண்டும். தாய் சேய் பராமரிப்பு சேவையை மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.. இதன் நிமித்தம் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவமும் அவசியமும் மருத்துவத் துறையினரால் உணர வேண்டும்.  மக்களுடன் மக்களுக்கு செயற்படுகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள், தன்னார்வுத் தொண்டு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் இனச்சுத்திகரிப்பு.   இனக்குறைப்பிற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி  உள நல ஆலோசனைகளும் வழங்கவேண்டும்.

நிலவன் / நிக்சன் பாலா,                                                                                              உளவளத்துணை, மற்றும் உளச்சமூகப்பணியாளர்.