சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதில் வருகிறது புதிய நடைமுறை! அமைச்சு வெளியிட்ட தகவல்

522 Views

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்குத் தேவையான வைத்திய பரிசோதனைக்கு இணையத்தள பதிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வைத்திய பரிசோதனைக்கான நாள் மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக பதிவுசெய்வதற்கு நாளை (27) முதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இணையத்தள செயலி சோதனைக்குட்படுத்தப்பட்டது. அது வெற்றியளித்த நிலையில், நாளை காலை முதல் இணையத்தளத்தினூடாக வைத்திய சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்துகொள்ள முடியுமென தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதற்கான கையடக்கத் தொலைபேசி செயலி எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான வைத்திய பரிசோதனைக்கான நாள் மற்றும் நேரத்தை பதிவுசெய்வதற்கு www.ntmi.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறு பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply