சர்வதேச விசாரணைகளில் இருந்து படையினரை பாதுகாக்க அரசு முயற்சி

614 Views

சர்வதேச விசாரணைகளில் இருந்து படையினரை பாதுகாக்க அரசு முயற்சி செய்து வருவதாக ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த கல்வியமைச்சின் ஊடக செயலாளர் புத்திக விக்கிரமரட்ண, படையினருக்கு சர்வதேச விடுபாட்டுரிமையை வழங்கும் சட்டங்களின் மூலம் இதனை செயல்படுத்த உள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வெளியேஉள்ள அமைப்புகள் படையினரை விசாரணைக்கு உட்படுத்துவதை அனுமதிக்காத விதத்தில்சட்டங்கள்உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சட்டங்கள் படையினரை சர்வதேச விசாரணைகளில் இருந்து பாதுகாப்பதற்கான வலுவை கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், இந்த விடயத்தில் அரசாங்கம் அமெரிக்காவின் உதாரணத்தை பின்பற்ற முயல்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply