சர்வதேச நீதிப்பொறிமுறையினை வேண்டி திருகோணமலையில் போராட்டம்

சர்வதேச நீதிப்பொறிமுறையினை வேண்டி திருகோணமலையில் போராட்டம் ஒன்று வியாழக்கிழமை (21) இடம் பெற்றது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை காரியாலயம் முன்பாக இடம் பெற்ற குறித்த போராட்டத்தினை வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையில் இடம் பெற்ற போர் குற்றங்களை விசாரனை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுறையினை உறுதிப்படுத்துமாறு கோரியே இப்போராட்டம் இடம் பெற்றது.

பாலியல் குற்றங்களுக்கு உடன் சர்வதேச விசாரனை வேண்டும், நீதிப்பொறிமுறையை உறுதிப்படுத்து போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.வடகிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் இந்த போராட்டம் இடம் பெற்றுள்ளது. இதில் பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.