சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்

162 Views
பல ஆண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளை விடுவிக்கக் கோரி வெலிக்கடை சிறைச்சாலை அருகே இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினத்தை(ஜூன் 26) ஒட்டி சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிறை வைக்கப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள், அரசியல் வாதிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதனிடையே வெலிக்கடை சிறைச்சாலையில் சில கைதிகள்,கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதைப் போன்று தமக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோரி போராட்டம் ஒன்றை  முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply