சமூக மட்ட புனர்வாழ்வு தொடர்பான TOT பயிற்சி நெறி

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய சமூக மட்ட புனர்வாழ்வு தொடர்பான TOT  பயிற்சி நெறியானது மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இன்று (11) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சி நெறியானது திருகோணமலை மாவட்டத்திலுள்ள சமூக சேவைகள் உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.தொடர்ச்சியாக இரு நாட்கள் இப் பயிற்சி நெறி இடம் பெறவுள்ளது

மாற்றுத்திறனாளிகளை வீட்டு மட்டத்தில் எவ்வாறு புனர்வாழ்வு செய்வது என்பதே இப்பயிற்சி நெறியின் பிரதான நோக்கமாகும். வளவாளராக சமூக மட்ட புனர்வாழ்வு இணைப்பாளர் டி.அஜித் சேரசிங்க கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இப்பயிற்சி நெறியில் மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள இணைப்பாளர் த.பிரணவன்,சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.