ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமைகளுக்கு இடையிலான முதல் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் 14 ஆம் திகதி கைச்சாத்தாகவுள்ளது.
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதனை தெரிவித்தார்.
இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். விரைவில் இலங்கையில் தேசிய தேர்தல்கள் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், கொழும்பு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்தப் பின்னணியிலேயே, ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமைகளுக்கு இடையிலான முதல் கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.