கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் 24 பேர் அனுமதி – 33 பேர் குணமடைந்தனர்

யாழ் போதனா வைத்தியசாலையின் கீழ் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் இயங்கும் covid-19 சிகிச்சை நிலையத்தில் இருந்து சிகிச்சையை முடித்த 33 பேர் அவர்களது வீடுகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் தலைவரின் அனுசரணையில் வீடுகளுக்குச் செல்லும் ஒவ்வொருவருக்கும் வேப்ப மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

சிகிச்சை பெற்றவர்களில் இருவர் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு உதவிகளை புரிந்தமை காக யாழ் போதனா வைத்தியசாலையின் விசேட பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதே சமயம் புதிதாக நேற்று காலை 24 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

தற்போது 148 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.