கோத்தா அரசிலும் றிசாட்டுக்கு விசுவாசமாக இருக்கும் வவுனியா அரச அதிபர்-இடமாற்றப்படுவாரா?

538 Views

புதிய ஜனாதிபதி பதவியேற்று புதிய அமைச்சரவையுடன் தற்போதைய அரசாங்கம் நடைபெற்றுவரும் நிலையில் முன்னை நாள் அமைச்சர்களின் அதிகார துஸ்பிரயோகம் மற்றும் அவர்கள் சார்பான அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் வெளிக்கொண்டுவந்து கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் முன்னாள் அமைச்சர் றிசாட்பதியுதீனின் ஆதரவுடன் வவுனியா பிரதேச செயலாளர் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றுவருகின்றது.

அந்தவகையில் தற்போது வவுனியா பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் பதவிக்கு றிசாட்பதியுதீனின் மற்றுமொரு விசுவாசி ஒருவரை நியமிப்பதற்கு முன்னாள் அமைச்சரும்,வவுனியா அரச அதிபரும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன

மேலும் வவுனியா அரச அதிபர் முன்னாள் அமைச்சர் றிசாட்பதியூதினின் நெருங்கிய நண்பர் என்பதுடன் அரச அதிபர் குறுகியகாலத்தில் இடமாற்றம் பெற்று செல்லவுள்ள நிலையில் அரச அதிபர் மூலம் முன்னாள் அமைச்சர் வரவிருக்கும் பொது தேர்தலை கருத்தில் கொண்டு தன் சார்பான ஒருவரை நியமிக்க இரகசியமாக நடவடிக்கை எடுத்துவருவதாகவும் செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

புதிய ஜனாதிபதி பதவியேற்று அரச இயந்திரத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் வவுனியாவில் முன்னாள் அமைச்சர்களின் விசுவாசிகளையும் ஊழல் பேர்வளிகளையும் மீண்டும் அதிகரத்தில் அமர்த்துவதென்பது மக்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply