626 Views
இறுதியாக அமெரிக்கா மௌனத்தைக் கலைத்து விட்டது, கோட்டபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இரத்துச் செய்யப் படவில்லை, அவருடைய விண்ணப்பம் பரிசீலிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்று இன்று அறிவித்திருக்கிறது. இலங்கை அரசியல் அமைப்புச் சட்டப் படி அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாதென்றும், சட்டவிரோதமாக தேர்தல் மேடைகளில் அவர் வழங்கும் வாக்குறுதிகளுக்கு எதிராக அமெரிக்க சட்டங்களின் கீழ் கோட்டபாயவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.