கோத்தபயா ராஜபக்ஸவின் வெற்றி இந்தியாவிற்கு பாதிப்பா

575 Views

இலங்கையின் தேர்தல் நிலைமைகளை இந்தியா ஆரம்பம் முதலே மிகவும் கூர்மையாக கவனித்து வந்தது. இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் சீனா, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சாலை அமைப்பதை தீவிரப்படுத்தி வருகின்றது. 2017ஆம் ஆண்டு இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஆக்கிரமித்த சீனா, இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது கடற்படையை விரிவுபடுத்தி வருகின்றது. ஆனால் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவிற்கு மிக அருகே சீனா, தனது பலத்தை விரிவுபடுத்தி வருவதை இந்தியா விரும்பவில்லை. இந்திய கடல் பகுதியில் சீன கப்பல்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளும்கூட, இந்தியக் கடல் பகுதியில் சீனா தனது கடற்படை கப்பல்களை நிறுத்தி வைத்திருப்பதை விரும்பவில்லை. இலங்கையின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக சீனா பில்லியன் டொலர் நிதியை வழங்கி வருகின்றது. இதற்கு இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸ ஆதரவு தெரிவித்திருந்தார். தற்போது தேர்தலில் போட்டியிட்ட மகிந்தவின் சகோதரரான கோத்தபயா ராஜபக்ஸ வெற்றி பெற்றுள்ளார் அது இந்தியாவிற்கு சீனா நெருக்கடி கொடுக்க வழிவகுக்கும்.

அத்துடன் இலங்கை போர்க் குற்றங்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சீனாவுடன் மிகவும் நெருக்கம் காட்டி வரும் ராஜபக்ஸ குடும்பத்தினர் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால், இந்தியாவிற்கு பெரும் உதவி இருக்காது என கருதப்படுகின்றது. இலங்கை தேர்தலிகளில் வேட்பாளர்கள் பலருக்கு சீனா சட்ட விரோதமாக பணம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் இந்தியாவிற்கு எதிராக கடல்வழி ஆக்கிரமிப்புக்கள், அத்துமீறல்களில் இலங்கையும், சீனாவும் ஈடுபட எளிதாகிவிடும்.

Leave a Reply