கோத்தபயா ஜனாதிபதியானால் பிள்ளையான் விடுதலையாவார்

527 Views
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான யோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக விசாரணைக்காக அழைக்கப்பட்ட பிள்ளையான் என்னும சிவனேசதுரை சந்திரகாந்தன் 2015 ஒக்டோபர் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டு இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிள்ளையான் இருக்கும் சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது சகோதரரான பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸ தேர்தலில் வெற்றி பெற்றதும் பிள்ளையானை விடுதலை செய்வேன் என பகிரங்கமாக கூறியிருக்கின்றார்.

இந்த செயலுக்கு விசனம் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்படி கருத்தை வெளியிட்டார்.

மகிந்த ராஜபக்ஸவின் இந்த வாக்குறுதியை வைத்தே கோத்தபயா ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும்.

Leave a Reply