கோட்டாபயவின் உத்தரவு! அரசாங்க ஊழியர்களை கண்காணிக்க களமிறங்கும் புலனாய்வு பிரிவு

அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் ஆராய புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்க நிறுவனத்திற்கு வரும் பொது மக்களிடம் இலஞ்சம் பெறும் நபர்களை கண்டுபிடிக்க புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு மேலதிகமாக ஆட்பதிவு திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகங்களிலும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளை ஈடுபடுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

விசேட ஊடக நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.