கொழும்பில் UNHCR உயர்ஸ்தானிகராலயம் முன் போராட்டம்

இலங்கையில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயம் அதன் செயற்பாடுகளை இலங்கையிலிருந்து நிறுத்திக் கொள்வதற்கு முன்னதாக இலங்கைக்கு அகதிகளாக வந்துள்ளவர்களை வேறு நாடுகளுக்கு புகலிடம் பெற்றுத் தருமாறு கோரி கொழும்பிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்திற்கு (  UNHCR ) முன் புகலிடக்கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.