கொழும்பில் பாரிய தீ – 17 பேர் வைத்திசாலையில்

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தினால் துணிவியாபாரக் கடை ஒன்று கடுமையாக சேதமடைந்ததுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்துவர்களில் 6 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள கடை ஒன்றில் இன்று (27) காலை இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கடைக்கு அருகில் இருந்த பல கடைகளும் சேதடைந்துள்ளன.