கொரோனா வைரஸ் – பலியானோர் எண்ணிக்கை 563 ஆக உயர்வு

சீனாவின் வூகன் மாநிலத்தில் உருவாக்கி உலக நாடுகள் எங்கும் பரவியுள்ள வைரசின் தாக்கத்தால் இதுவரையில் 563 பேர் பலியாகியுள்ளதாக சீனா தேசிய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (05) மட்டும் 73 பேர் வைத்தியசாலைகளில் இறந்துள்ளனர். அதேசமயம் 28,276 பேர் இதுவரையில் தோற்று நோய்க்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.