கொரோனா வைரஸ் தொடர்பில் அதிர்ச்சிகர தகவல்களை பரப்பிய இலங்கையரை தேடும் சீனா

சீனாவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா ரைவஸ் தொடர்பான போலியான தகவல்களை பரப்பிய குழுவினரை சீனா தேடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் 11 மில்லியன் மக்கள் உயிரிழக்கவுள்ளதாக போலியான தகவல்களை இலங்கையர் ஒருவர் வெளியிட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இணையத்தளங்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் பாரியளவில் போலியான தகவல்கள் பரப்பப்பட்டமையினால் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

வௌவால் சுப் காணொளி, மரணங்களின் எண்ணிக்கையை திரிபுபடுத்தி வெளியிடுவது, ஊசி மற்றும் சூழ்ச்சிகள் தொடர்பில் தகவல் குறிப்பிட்டு மக்களை அச்சப்படுத்தும் நடவடிக்கைகளை குறித்த இலங்கையர் உட்பட குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொடர்பில் 50இற்கும் அதிகமான அமைப்புகள் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இவர்களுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.