கொரோனா வைரஸிற்கு எதிரான சுதேச வைத்திய முறைகள் குறித்து ஆராய்வு இராணுவத் தளபதி

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக சுதேச வைத்திய முறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக தேசிய மருத்துவ வைத்தியர்களுக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ராஜகிரியவில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு தேசிய மையத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் தேசிய மருத்துவத்துறை மருந்துகளும், சுதேச மரு்துவத்துறை மருந்துகளும் கொரோனாவை கட்டுப்படுத்தும் என்பது குறித்து ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் சுமார் 50 சுதேச வைத்தியத்துறை வைத்தியர்கள் கலந்து கொண்டதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.