கொடிகாமம் பகுதியில் சுவரோவியங்கள் மீது கழிவு நீரை ஊற்றிய மர்ம நபர்கள்

197 Views

யாழ். கொடிகாமம் பகுதியில் வரையப்பட்டிருந்த சுவரோவியங்கள் மீது இனந்தெரியாத மர்ம நபரக்ள் கழிவு நீரை ஊற்றியுள்ளனர்.

நாட்டைத் தூய்மைப்படுத்துவோம் என்னும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தன்னார்வ இளையோர்களால் சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு பல தர்ப்பினர் ஆதரவை வழங்கி வருவதுடன், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொடிகாமம் பகுதியில் இளையோரால் வரையப்பட்ட சுவரோவியம் மீது இனந்தெரியாதோர் கழிவு நீரை ஊற்றி அதனை நாசம் செய்துள்ளனர். தாம் பல கஸ்டங்களுக்கு மத்தியில் நகரை அழகூட்டும் முகமாக வரைந்த சுவரோவியத்தை விசமிகள் நாசம் செய்துள்ளனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என சுவரோவியத்தை வரைந்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply